பேழை THE ARK பிரன்ஹாம் கூடாரம், ஜெபர்ஸன்வில், இந்தியானா, அமெரிக்கா 55-05-22 -!. காலை வணக்கம், நண்பர்களே. இன்று இங்கே இருப்பதைக் குறித்து ஒரு விதமாக கொஞ்சம் தவறாக கூறப்பட்டிருந்ததாக எனக்குக் காணப்பட்டது. நான் போய்க் கொண்டிருந்தேன்... நான் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க வரும் போது, அந்நேரத்தில் தான் நான் வாக்குக் கொடுத்து இருந்தேன், நான்... அது சகோதரன் நெவில் மூலமாக, அந்த வானொலி ஒலிபரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் எப்படியோ செயலாளர்கள் நேற்று அவரிடம் கூறத் தவறி விட்டனர், அது இல்லாமல் போனதற்கு அது தான் காரணம். அது முறைப்படி அறிவிக்கப் படவில்லை, ஒலிபரப்பில் அது கூறப்படவில்லை. சில ஜனங்கள் அழைத்து இக்காலையில் ஜெபிக்கப்பட விரும்பினார்கள். 2. எனவே அவர்கள் அதைக் கூறினபோது, நான் சற்று உணர்ச்சிவசப்பட்டு விட்டேன், புதிய மகனுடைய வருகையைக் குறித்து, ஒவ்வொரு தடவையும், அதற்காக மிகவும் நன்றி உள்ளவனாயிருக்கிறேன். செவிலி அவனை அறையை விட்டு வெளியே கொண்டு வந்தபோது, நான், ‘ஜோசப், நான் 4 வருடங்கள் உனக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். எனவே நீ இங்கே இருப்பதற்காக நான் நிச்சயமாகவே சந்தோஷமடைகிறேன்’ என்றேன். எனவே அது... இங்கே ஏறக்குறைய 4 வருடங்களுக்கு முன்பு, நான்... 3. அந்தச் சிறு பெண் பிள்ளை பிறப்பதற்கு சற்று முன்பு, அவள் வந்து கொண்டிருந்தாள் என்பதை நாங்கள் அறியும் முன்பே, ஏன், நான் வேதாகமத்தில் உள்ள யோசேப்பின் ஜீவியத்தை வாசித்த பிறகு, ஒரு நாள் ஜெபித்துக் கொண்டிருந்தேன், அப்போது நான், ‘எப்படிப்பட்ட ஒரு பரிபூரண மனிதன்’ என்று நினைத்தேன். ஆபிரகாம் என்பது தெரிந்து கொள்ளுதலாக இருந்தது. ஈசாக்கு என்பது நீதிமானாக்கப்படுதலாக இருந்தது. யாக்கோபு என்பது கிருபையாக இருந்தது. ஆனால் யோசேப்பு என்பதோ பரிபூரணமாக இருந்தது. அதன் பிறகு அது போய் விட்டது, பாருங்கள்-? அதற்கு மேல் அதைக் குறித்து அதிகமாக எதுவும் கூறப்படவில்லை. எனவே நான் யோசேப்பைக் குறித்தும், அவன் எவ்வாறு பிறந்தான் என்பதைக் குறித்தும், அவனுடைய தகப்பனின் அன்பைக் குறித்தும் எண்ணினேன். 4. இதை அறிவிக்கிறேன், தற்செயலாக, அவர்கள் பல்வர்ணமுடைய ஒரு கோட்டை அவனுக்கு செய்து கொண்டிருப்பதாக ஆப்பிரிக்காவிலிருந்து எனக்கு ஒரு தந்தி அல்லது செய்தி கிடைத்தது. அப்படியே...-?... அவர்கள் அவனுக்காக எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். எனவே அது... எனவே அங்கே ஒரு... 5. நான் திரும்பி, அச்சிறு தனியறைக்குள் சென்று, ஜெபிக்கத் துவங்கினேன். ‘தேவனே...’ இந்த யோசேப்பு என்னவொரு அற்புதமான மனிதன் என்று நினைத்த போது, நான்-நான்-நான் உடைக்கப்பட்டவனாய் கண்ணீர் சிந்தினேன். அவன் எப்படியாக 30 வெள்ளிக்காசுக்கு விற்கப்பட்டான், இயேசு-இயேசு-இயேசு- யூதாஸ், என்னை மன்னியுங்கள், அவன் இயேசுவை விற்றுப் போட்டது போன்று அப்படியே கிட்டத்தட்ட 30 வெள்ளிக் காசுகள். அவன் கல்லறையிலிருந்து மேலே எடுக்கப்பட்டு, உங்களுக்குத் தெரியும், பார்வோனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தான், யோசேப்பின் மூலமாகவே அன்றி எந்த மனிதனும் இராஜாவைக் காண முடியாது. அவன் புறப்பட்டு வருகையில், எக்காளம் முழங்கும் போது, ஒவ்வொரு முழங்காலும் முடங்க வேண்டும். இயேசுவுக்கும் அதே காரியம் தான், உங்களுக்குத் தெரியும், ‘ஒவ்வொரு நாவும் அறிக்கை செய்யும்.’ நான் அப்படியே பின்னால் சென்று ஜெபிக்க ஆரம்பித்தேன். 6. இப்பொழுது, ஜனங்கள் மூன்று அடிப்படைக் கூறுகளுக்குள் (elements) ஜீவிக்கிறார்கள். முதலாவது மனித இயல்பு (humanistic). இரண்டாவது தெய்வீக வெளிப்பாடு. மூன்றாவது தரிசனம். 7. இப்பொழுது, இது, ஜெபத்தில் கூறப்படுவதைப் போல, நீங்கள் யாராவது ஒருவருக்காக மனித இயல்பினாலே ஜெபிக்கும் போது, நாம், ‘நல்லது, நீங்கள் சுகமாகி விடுவீர்கள் என்று நான்-நான் நம்புகிறேன். பாருங்கள், நான்-நான் நம்பிக் கொண்டிருக்கிறேன். என்னால் கூடுமான எல்லா விசுவாசத்தையும் உபயோகப்படுத்த முயற்சிக்கும்படிக்கு நான் உங்களோடு கூட விசுவாசிக்கிறேன்’ என்று கூறுகிறோம். அது தான் மனிதன். 8. இரண்டாவது, தெய்வீக வெளிப்பாடு, ஏதோவொன்று உங்களுக்கு வெளிப்படும் போது. அது சம்பவிக்கப் போகிறது என்று உங்கள் இருதயத்தில் அறிந்து கொள்கிறீர்கள், இன்னுமாக அங்கே எதுவும் சம்பவிக்கவில்லை, ஆனால் அப்படியே அது வெளிப்பாடாக இருக்கிறது. 9. மூன்றாவது ஒரு தரிசனம். நிச்சயமாக அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாக இருக்கிறது. அது பரிபூரணமாகவும் ஐயத்துக்கு இடமின்றியும் இருக்கிறது. -!0. இப்பொழுது, அது இங்கேயிருக்கும் இந்த மண்டலத்திற்குள் பிரவேசிக்கிறது. ஏதோ ஓன்று என்னிடம், ‘நீ ஒரு ஆண் பிள்ளையைக் கொண்டிருக்கப் போகிறாய், நீ அவனுடைய பெயரை ஜோசப் என்று அழைப்பாய்’ என்று கூறினது. நல்லது, எனக்கு ஒரு சிறு மகள் இருந்தாள். எனவே நான், ‘நல்லது...’ என்று நினைத்தேன். நான் அதற்காக கர்த்தரைத் துதித்தேன். அதற்கும் ஏறக்குறைய ஒரு மாதம் கழித்து, நாங்கள் மீண்டுமாக பெற்றோராகப் போகிறோம் என்பதைக் கண்டு கொண்டோம், எனவே அது தான் என்னுடைய ஜோசப்பாக இருக்கலாம் என்று நினைத்தேன். எனவே அது பிறந்தது, அது ஜோசபினாக இருந்தது; அது ஒரு பெண் பிள்ளையாக இருந்தது. அது ஜோசப் என்று நான் கூறினதாக அநேகர் எண்ணினார்கள். நானோ, ‘இல்லை, இல்லை. அது ஜோசப் என்று நான் கூறவில்லை’ என்றேன். அவர்களில் சிலர், ‘நல்லது, இதைக் குறித்து ஒரு தரிசனத்தை நீர் கண்டதாக கூறவில்லையா-?’ என்று கூறினார்கள். ஜனங்கள் எப்படி காரியங்களைக் குறித்து குழம்பிக் போகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும். -!2. நான், ‘அதைக் குறித்த ஒலிநாடாக்கள் என்னிடம் உள்ளன. புரிகிறதா-? வந்து கேளுங்கள். அது ஜோசப் என்று நான் ஒருபோதும் கூறவேயில்லை. நான் ஜோசப் என்ற பெயருடைய ஒரு மகனைக் கொண்டிருக்கப் போகிறேன் என்பதாக கர்த்தர் என்னுடைய இருதயத்தில் வைத்திருக்கிறார்’ என்றேன். பாருங்கள்-? நான், ‘அது எப்படி, எப்போது, அல்லது என்னவாக இருக்கும் என்று எனக்குத் தெரியாது, ஆனால் அது நடக்கப் போகிறது’ என்றேன். எனவே எனக்குத் தெரியவில்லை. ‘நான் ஒருக்கால் கொண்டு இருக்கலாம் - அவனைக் கொண்டு இருப்பதற்கு முன்பாக ஒருக்கால் ஆறு பெண் பிள்ளைகளைக் கொண்டிருக்கலாம், ஆனால் அவன் இங்கே இருப்பான்.’ நல்லது, அது என்னுடைய இருதயத்தை விட்டு ஒரு போதும் அகலவே இல்லை. நாங்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தோம். அதன் பிறகு, அன்றொரு நாள் அவன் வந்து சேர்ந்தான். அவன் இதோ இருக்கிறான், எனவே கர்த்தர் எதையாகிலும் வாக்களிக்கும் போது, கர்த்தர் தாம் வாக்குப் பண்ணினதை செய்வார் என்பதை அறிந்து நான், அவனுக்காக மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். -!3. பாருங்கள்-? அவர் அப்படியே செய்தாக வேண்டும். அவர் தேவனாக இருக்க வேண்டுமானால், அவர் தம்முடைய வார்த்தையைக் காத்துக் கொள்ள வேண்டும். -!4. நான்--நான் சில சமயங்களில் என்னுடைய வார்த்தையைக் காத்துக் கொள்ள முடிவதில்லை. உங்களாலும் உங்கள் வார்த்தையைக் காத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் நாம் நல்ல நோக்கத்தோடு தான் வாக்குக் கொடுக்கிறோம், ஆனால் அதை நிறைவேற்ற நம்மால் முடிவதில்லை. சூழ்நிலைகளினாலும், அது கடினமாக இருப்பதினாலும், மேலும் மற்ற காரணங்களினாலும் நாம் செய்ய வேண்டுமென்று விரும்புவதை சில சமயங்களில் நம்மால் செய்ய முடியாத ஒரு நிலைக்கு அது நம்மைக் கொண்டு வந்து விடுகிறது. 5. ஆனால் தேவனால் தம்முடைய வார்த்தையைக் காத்துக் கொள்ள முடியும், அவர் அதைச் செய்வார். அதைச் செய்யாமலிருப்பது அவரால் கூடாத காரியமாகும். இக்காலையில் அந்த காரணத்தினால் தான் நாம் அவரை நேசிக்கிறோம். ‘நாம் அவரிடத்தில் ஒப்புக் கொடுத்ததை தேவன் அந்நாள் வரைக்கும் காத்துக் கொள்ள வல்லவராயிருக்கிறார்’ என்ற அந்தப் பரிபூரண உறுதியின் மேல் இளைப்பாறிக் கொண்டிருங்கள். 6. இப்பொழுது, வெளியே ஒரு மோசமான நாளாக இது இருக்கிறது, ஆனால் கூடாரத்தினுள்ளே புழுக்கமாக இல்லாமல், போதுமான அளவு குளிர்ச்சியாக உள்ளது, ஒருவருக்கொருவர் நெருக்கிக் கொண்டிருக்கும்படி இங்கே போதுமான ஜனங்கள் இல்லை, அவர்கள் வரிசைகளைச் சுற்றிலும் நின்று கொண்டு இருக்கிறார்கள். ஆனால் தொடங்குவதற்கும், வார்த்தையை போதிப்பதற்கும் இது அப்படியே ஒரு நல்ல நேரமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். -!7. பரிசுத்த ஆவியானவர்... என்று பார்க்கும்படி கடந்த சில மணி நேரங்களாக நான் கடினமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு ஜெப வரிசைக்காக அங்கே பின்னால் இருக்கும் பில்லியிடம் கூட அட்டைகளும் மற்றவைகளும் இருந்தன. ஆனால் இன்னுமாக என்னால் முடியவில்லை, நீங்கள்... நான் அதை ஒழுங்குபடுத்துவதில்லை. அது தான் என்னை ஆளுகை செய்கிறது. நீங்கள் பாருங்கள்-? எனக்கு--எனக்கு அதனோடு எந்த சம்பந்தமும் கிடையாது. அவர் அதைக் குறித்து என்ன கூறுகிறார் என்பதை அது பொறுத்துள்ளது. 8. இப்பொழுது, இங்கேயிருக்கும் சகோதரன் நெவில் அவர்கள் இந்த எழுப்புதலைக் குறித்தும், இங்கேயிருக்கும் இந்த சகோதரன் கிராங்க் அவர்களைக் குறித்தும் அறிவிப்பு செய்து கொண்டிருந்தார். அந்த மனிதரை எனக்குத் தெரியாது. ...ஐ காணும்படிக்கு கடந்த இரவில் நான் மருத்துவமனையிலிருந்து வரும் என்னுடைய பாதையில் வந்தேன். சகோதரன் ராபர்ட்ஸ் அவர்கள் கடந்த இரவில் தம்முடைய திரைப்படத்தை அங்கே போட்டுக் காண்பித்திருந்தார். கட்டிடத்தின் மிகவும் பின்னால் சகோதரன் கிராங்க் அவர்களும் அவருடைய தகப்பனாரும் இருக்கிறார்கள். சகோதரன் கிராங்க் தாமே வெறும் ஒரு இளைஞனாக இருக்கிறார், அவர் ஒருக்கால் 20, 21, அவ்விதமாக ஏதோவொன்றாக காணப்படுகிறார். மேலும்... ஆனால் அவருடைய தகப்பனார் அவரோடு இருக்கிறார். அதன் பிறகு நியூஆல்பெனியிலிருந்து வந்திருக்கும் சகோதரன் மாதெனி அவர்கள்... ஒரு பெந்தெகோஸ்தேகாரர். இப்பொழுது, இந்த சகோதரன் கிராங்க் அவர்களும் கூட பெந்தெகோஸ்தேகாரர் தான் என்று நம்புகிறேன். -!9. எனவே, இந்த அடுத்த வார ஆராதனையை நான் நடத்த வேண்டும் என்று விரும்பின மிகவும் அருமையான மனிதர்களாக அவர்கள் இருக்கிறார்கள். நிச்சயமாகவே, அதைச் செய்ய முடியவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். பிறகு நான் அங்கே சனிக்கிழமை இரவில் இருப்பேனா என்று வியந்து கொண்டிருந்தேன். இன்னும் எனக்குத் தெரியவில்லை. நான் பார்க்க வேண்டியிருக்கிறது என்று நான் அவரிடம் கூறினேன். சகோதரன் காபிள் முடித்து விட்டார், அடுத்து வரும் வெள்ளிக் கிழமையும், சனிக் கிழமையும், ஞாயிற்றுக் கிழமையும் விரும்பினார். மேலும் சகோதரன் ஹால் அவர்கள் இந்த வாரத்தில் ஒரு இரவுக்காக மில்டவுனில் இருக்க வேண்டியதாய் இருக்கிறது, ஏனென்றால் நாங்கள் அடுத்த வாரம் கோடைக்காக புறப்பட்டுப் போகிறோம். எனவே அப்படியானால் அவர்கள்... எனக்கு அங்குமிங்கும் பரவலாக ஒரு சில சிறிய கூட்டங்கள் இருந்தன. அது எங்கேயிருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. சற்று கழிந்து அவர் அதை அறிந்து கொள்ளட்டும் என்று நான் அவரிடம் கூறினேன். 20. மனைவி நலமாக இருக்கிறாள். ஜனங்களாகிய உங்கள் எல்லாருடைய ஜெபங்களையும் நான் நிச்சயமாக பாராட்டுகிறேன். அது ஜெபத்தின் மூலமாக மட்டுமே இருந்தது. இது இருபாலரும் கலந்த ஒரு கூட்டமாக இருப்பதால், என்ன சம்பவித்தது என்று என்னால் கூற முடியவில்லை. ஆனால் அவர்கள் வழக்கமான நேரத்திற்கு போகுமென்று நினைக்கவில்லை, அவள் மணிக்கணக்காக, மணிக்கணக்காக, மணிக்கணக்காக அங்கே இருந்தாள். பாருங்கள்-? எனவே வழக்கமாக இருதயம் அதிக வேகமாக அடித்து (flies up) அவர்கள் மரித்து விடுகிறார்கள். ஆனால் தேவனுடைய கிருபையினால், எப்பொழுதாவது இருந்த அவளுடைய மற்ற எந்த பிரசவங்களைக் காட்டிலும் அவள் நன்றாக இருக்கிறாள். எனவே உங்களுடைய ஜெபங்கள் தான் உதவி செய்தது என்று நான் அறிவேன். நான் என்னுடைய முழு இருதயத்தோடும் நிச்சயமாகவே அதைப் பாராட்டுகிறேன். மேலும் இப்பொழுதும் ஜெபியுங்கள், நாங்கள்... 2-!. இந்தச் சிறிய மகனின் வருகையானது, என்னுடைய ஜீவியத்திலேயே ஒரு-ஒரு திருப்பு முனையாக குறிக்கப்பட்டு விட்டது. நான்... ஒரு சில நாட்களுக்கு முன்பு, அவன் ஒருக்கால் சரியாக பிறக்க மாட்டான் என்பது போல காணப்பட்டு, காரியங்கள் எல்லாமே எங்களுக்கு எதிராக இருந்தது போன்று தோன்றியது, எதிர்ப்பு... வழக்கமாக பகலுக்கு முன்பாக மிகவும் இருளாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும், அது தான் வழக்கமாக மனிதனுடைய நடைமுறை ஒழுங்காக இருக்கிறது. எனவே நாங்கள்... நான் கிரீன்ஸ்மில்லில் அங்கே மேலேயுள்ள சாரணர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடமாகிய என்னுடைய பழைய இடத்திற்கு ஏறிச் சென்றேன். என்னால் அதிக நேரம் அங்கே நிற்க முடியவில்லை, எனவே சற்று நேரம் நான் கர்த்தராகிய இயேசுவோடு தனிமையில் திரும்பிச் சென்றேன். எல்லாம் சரியாக இருக்கும் என்று அவர் எனக்கு உறுதியளித்தார். எனவே அப்போது நான், ‘கர்த்தாவே, இதுமுதற் கொண்டு நான்--நான் உமக்கு வாக்குக் கொடுக்கிறேன்...’ என்றேன். எனக்கு அநேக கடினமான நேரங்களும், அவ்விதமான காரியங்களை உடைய நேரங்களும் உண்டாயிருந்தன. 22. நீங்கள் பாருங்கள், இக்காலையில் அநேகமாக ஒன்று அல்லது இரண்டு அந்நியர்கள் நம்மோடு இருக்கிறார்கள். எனக்குத் தெரியவில்லை. இங்கே ஜெபிக்கப்பட விரும்பின இரண்டு பேர்களுடைய பெயர்கள் எனக்குக் கிடைத்தது. எனவே இது அப்படியே இங்கே சிறிய கூடார குழுவாக இருக்கிறது என்று நான்--நான் எண்ணுகிறேன். 23. ஆனால் உலகமோ, ஜனங்களோ அதைக் குறித்து எதுவும் அறிந்திராத காரியங்களினூடாக, உங்களுக்குப் புரிகிறதா-? மிகவும் கடினமான காரியங்களினூடாக நான் கடந்து போகிறேன். சத்துரு அந்த உட்புற எல்லைக் கோடுகளில் (inside lines) கிரியை செய்கிறான் என்பது உங்களுக்குத் தெரியும். வெளியே நீங்கள் அதைக் கவனிப்பதில்லை. துண்டிக்கப்படுவது உட்புற எல்லைக் கோடுகள் தான். எனவே நான் முழு வல்லமையிலும் அதை சந்திக்கிறேன். எனவே நான்... ஆனால் நான் அதை எதிர்பார்க்கிறேன். நான்-நான்-நான் ஒருவிதமாக... அது அவ்வாறு செய்யப்படாமலிருந்தால், ஒருக்கால்... என்னவாக இருக்கும் என்று அப்படியே வியக்கிறேன். நான் பிசாசோடு நட்பு வைத்துக்கொள்ள விரும்பவில்லை. அவன் என்னுடைய சத்துரு என்பதை நான்-நான் அறிவேன், நான்-நான் யுத்த களங்களில் சந்திக்க வேண்டியதாய் உள்ளது. எனவே சண்டையிடுவதற்கான பொருட்களுக்காக நான் மிகவும் நன்றி உள்ளவனாய் இருக்கிறேன், அது தான் ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தை; அது என்றென்றுமாக நிலைத்து இருக்கும். மேலும் இப்பொழுது, என்னுடைய கூட்டங்களை மறுபடியுமாக ஒழுங்கு செய்வதற்கு தேவன் எனக்கு உதவி செய்கிறார் என்று நான் அப்படியே நம்பிக் கொண்டிருக்கிறேன், நான் அப்படிப்பட்ட இடங்களில் நீண்ட காலம் தங்கி இருக்கலாமா என்றும் அவ்விதமான காரியங்களைச் செய்யலாமா என்றும். ஜெபத்தில் இருங்கள். 24. தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருக்கிற சகோதரன் மற்றும் சகோதரி ஷுமன் இங்கே தங்கள் பாதையில் இருக்கிறார்கள். அவர் தென் ஆப்பிரிக்காவிலுள்ள ஊழிய சங்கத்தின் தலைவர், ஏறக்குறைய இந்த இலையுதிர் காலத்தில் வந்து இந்தியாவிற்கும், மற்ற இடங்களுக்கும் போகலாமா என்று பார்க்கும்படி. 25. இங்கேயிருக்கும் சகோதரன் டாம்ஸ் அவர்கள் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்திருக்கிறார். நான் அன்றொரு நாள் அவரைச் சந்தித்தேன். அவர் அங்கே உள்ளூர் ஜனங்கள் (natives) மத்தியில் ஒரு மகத்தான வேலையைச் செய்து கொண்டிருக்கிறார். சகோதரன் டாம்ஸ் அவர்களின் செயல்முறைத் திட்டத்தை நான் ஒருவிதமாக விரும்புவதற்கான காரணம் என்னவென்றால், அவர் பேசுகிற செயல்முறைத் திட்டமானது செயல்முறை படுத்தப்பட்டுள்ளது, அவரும் சகோதரன் டாமி ஆஸ்பார்ன் அவர்களும் ஆதரவு கொடுப்பதற்கு தகுதியானவர்களாக இருக்கிறார்கள், அது சரி என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் அவர்--அவர் சுதேச மிஷனரிமார்களை (native missionaries) வெளியே அனுப்பிக் கொண்டு இருக்கிறார். நீங்கள் பாருங்கள், அவை எல்லாவற்றிற்கும் பிறகு, சுதேசிகளுக்குத் (native) தான் சுதேசிகளைப் பற்றி அதிகமாகத் தெரியும். 26. நாம் இங்கே ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு மனிதனை அனுப்ப முடிந்தது. அவர் ஒரு சகோதரன் தான்; நாம் அவரை நேசிக்கிறோம், அவரை ஏற்றுக் கொள்கிறோம், மற்றும் ஒவ்வொன்றையும் செய்கிறோம். ஆனால் அவருக்கு அமெரிக்க பழக்க வழக்கங்களும், அமெரிக்கர்களின் பழக்க முறைகளும் தெரியாது. இந்த வேலையைச் சரியாகச் செய்வதற்கு ஒரு அமெரிக்கன் தான் தேவை. இங்கே சீனாவிலிருந்து யாரையாவது அனுப்பினால் என்னவாகும்-? ஏன், அவன் ஒரு மிஷனரியாக இருந்தான், ஆனால் அவனால் அநேகமாக கொஞ்சம் ஆங்கிலம் பேச முடிந்தது. இது முழுவதுமே பிளவுபடுத்துகிறது, அது அப்படியே அமெரிக்கர்களுக்குள் வருவதும், அமெரிக்கர்களோடு வேலை செய்வதும், அவர்களுடைய பழக்க வழக்கங்களைச் செய்வதும், மற்றவைகளை செய்வதும் எப்படி என்று அறிந்து கொள்ளும் ஒரு மனிதனைப் போன்று அது விரும்பத்தக்க விளைவுகளை ஏற்படுத்தவில்லை. அந்தவிதமாகத்தான் அது போகிறது. நாம் ஒருவிதத்தில் வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும், மேற்கிலும், மேற்ப்புறத்திலும், மற்றவைகளிலும் உள்ள இங்கேயிருக்கும் ஜனங்களுடைய வழிப்பாதைகளை அடைத்து விடுகிறோம். 27. இங்கே கொஞ்ச காலத்திற்கு முன்பு, நான் கலி...ல், ஃபுளோரிடாவில் இருந்தேன். ஒரு இரவு நேரத்தில், அங்கே ஒரு அன்பார்ந்தவர், அன்பான சகோதரன் இருந்தார், அவருக்கு சகோதரன் ஜாக்ஸன், கெயில் ஜாக்ஸன் என்ற பெயருடையவர்கள் மூலமாக ஒரு கூட்டம் உண்டாயிருக்கிறது, இவர் என் மூலமாக மனமாற்றம் அடைந்து சுகமடைந்தவர்களில் ஒருவர். எனவே, நான் பின்னால் இருந்தேன். வழக்கமாக, என் காணிக்கைகளிலும், அதைப் போன்ற மற்ற காரியங்களிலும், ஜனங்கள் அதை அறியும்படி நான் அனுமதிப்பதில்லை என்பது உங்களுக்குத் தெரியும். கர்த்தர் தருவாரானால், அது சரிதான். அவர் கொடுக்கவில்லை என்றால், ஏன், நமக்கு அது வேறு எங்கிருந்தாவது கிடைக்கும். எனவே... கெயில் அவர்கள் மேலே வந்து, மேலாளரிடம் கூறினார், அவர், ‘நல்லது, பண விவகாரங்கள் எப்படி போய்க் கொண்டிருக்கிறது-?’ என்று கேட்டார். அவர், ‘ஓ, சற்றேறக் குறைய 1000 டாலர்கள், அதற்கும் சற்று அதிகமாக, ஒருக்கால் 500 டாலர்கள் தேவைப்படலாம்’ என்றார். 28. அவர், ‘அதைக் குறித்த பிரச்சனை என்னவென்றால், இந்த தெற்கத்தியர்களை எவ்வாறு கையாளுவது என்பது உமக்குத் தெரியவில்லை’ என்றார். எனவே அவர் அங்கே சற்று எழுந்து நின்று..., ‘இன்றிரவு நான் உமக்காக காணிக்கை எடுக்கலாமா-?’ என்று கேட்டார். ‘சரி, ஆனால் பிச்சை எடுக்க வேண்டாம், ஏனென்றால் சகோதரன் பிரன்ஹாம் அதற்காகவே எங்களை வைத்திருக்கிறார். நாங்கள் ஒருபோதும் பிச்சை எடுக்க மாட்டோம்’ என்றார்கள். 29. எனவே அவர் அங்கே எழுந்து நின்று, அவர் வெறுமனே ஒருசில வார்த்தைகளைக் கூறினார், அப்போது காணிக்கை எடுத்ததில் 2000 டாலர்கள் இருந்தன. அவர், ‘பார்த்தீர்களா, சகோதரன் பாக்ஸ்டர், தெற்கத்தியர்களை எவ்விதம் கையாள்வது என்று உங்களுக்குத் தெரியவில்லை, அவ்வளவு தான்’ என்றார். 30. எனவே அந்த விதமாகத்தான் அது இருக்கிறது. நீங்கள் தெற்கத்தியர்களிடம் பழக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் வடக்கத்தியர்களிடமும் பழக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் பழக்கப்பட்டிருக்க வேண்டும். நான் ஒரு சுதேசியைக் குறித்து எண்ணிப் பார்க்கிறேன், அவர்கள் தங்களுடைய சொந்த பழக்க வழக்கங்களையும், அவர்களுடைய சொந்த பழங் குடியினரையும் அறிந்து வைத்திருக்கிறார்கள், அது... க் காட்டிலும் மிகச் சிறந்த வழியாக இருக்கிறது. நமக்கிருக்கிற தையல்காரர்களால் தயாரிக்கப்பட்ட எல்லாவற்றைக் காட்டிலும், தங்களுடைய சொந்த ஜனங்களிடம் எடுத்துச் சொல்ல மிகச் சிறந்த நபராக இருக்கிறான்-? அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது சரியே. எனவே அந்தச் சகோதரர்களுக்காக நான் மிகவும் நன்றி உள்ளவனாய் இருக்கிறேன். 3-!. இப்பொழுது, இந்தக் காலை வேளையில், நான் சிறிது நேரம் உங்களிடம் பேச விரும்புகிறேன். எனக்கு... தெரியவில்லை, கொஞ்ச காலத்திற்கு இதுவே உங்களோடு இருக்கும் என்னுடைய கடைசி கூட்டமாக இருக்கும். இப்பொழுது நாங்கள் ஜார்ஜியாவிலுள்ள மேகனுக்குப் (Macon, Georgia) போகிறோம். 42 தெற்கத்திய பாப்டிஸ்ட் சபைகள் அதற்கு பொறுப்பேற்றுள்ளன என்று அறிவேன். எனவே பிறகு, அங்கிருந்து, நாங்கள் டென்வரில், சர்வதேச முழு சுவிசேஷ கிறிஸ்தவ வர்த்தக புருஷர்களிடம் போகிறோம். அதன் பிறகு நான் கொஞ்ச காலத்திற்கு கனடாவிற்குப் போக வேண்டும். 32. அப்போது நாங்கள் சகோதரன் ஷுமேன் அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைக் காண்போம்... நாங்கள் வெளிநாட்டில் எங்கே போக வேண்டும் என்றோ அல்லது தொடர்ந்து அந்த மாநிலங்களிலேயே இருந்து விடலாமா என்று. நிச்சயமாகவே, சகோதரன் மூர் அவர்கள் தான் இதற்கான நிகழ்ச்சி நிரல்கள் எல்லாவற்றையும், பயணத் திட்டங்கள் எல்லாவற்றையும் தயாரிக்கிறார். அவர் அங்கே எங்களோடு இருப்பார், அங்கே நாங்கள் சகோதரன் ஷுமேன் அவர்களைச் சந்திக்கிறோம். சகோதரன் ஷுமேன் வரும்போது, நீங்கள் அவரைக் அறிந்து கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன், அவர்... அவர் இங்கே இக்கூடாரத்தில் உங்களோடு பேசும்படியாக ஒருமுறை வருகிறார். அவர் மிக அருமையான மனிதர், அவரும் அவரது மனைவியும் அருமையானவர்கள். நான் ஆப்பிரிக்காவில் இருந்த போது, என்னை ஒரு சகோதரனைப் போல நடத்தினார்கள், எனவே அவர் இந்த வழியாக வரும் போதும், கர்த்தர் இடத்திலுள்ள அன்போடு அதே விதமாகவே அவரை நடத்துங்கள். 33. இப்பொழுது, நான்... உள்ளே வந்த பிறகு, இதை அறிந்து கொண்டேன், சகோதரன் நெவில் அவர்கள் ஒலிபரப்பிற்காக (broadcast), அதைப் பிடித்து வைத்திருக்கவில்லை என்று அவர்கள் என்னிடம் கூறினார்கள். நான் கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன். எத்தனை பேர் ஒலிபரப்பை கேட்கிறீர்கள்-? அந்த-அந்த பாடல் மனதில் ஆழ்ந்து பதிகிறதாக இருந்தது, பிரசங்கம் அதைக் காட்டிலும் சற்று மேலானதாகவே போகிறது என்று நான் உங்களிடம் கூறுகிறேன். எனவே நேற்று உண்மையாகவே அது ஒரு நல்ல செய்தியாக இருந்தது. நீங்கள் எல்லாரும் அதைப் பாராட்டுகிறீர்களா-? அவரை வெட்கப்படுத்தவல்ல, ஆனால் அது சத்திமாய் உள்ளது. நான்... சகோதரன் நெவில் தவறான ஏதோவொன்றைச் செய்து கொண்டு இருக்கிறார் என்று நான் நினைத்தால், அவரைப் பின்னாலுள்ள அறைக்குள் அழைத்துச் சென்று, அவை யாவற்றையும் குறித்து நாங்கள் பேசி, அதன் பேரில் ஜெபிப்போம். அவர் சரியான ஏதோவொன்றைச் செய்து கொண்டிருந்தால், நான் அதைக் குறித்தும் அவரிடம் கூற விரும்புகிறேன், பாருங்கள்-? அது நம்மை நலமாக உணரச் செய்கிறது. 34. அங்கேயுள்ள... சிறு குழந்தைக்கு அனுப்பப்பட்டிருக்கிற அருமையான சிறு அட்டைகளும், அன்பளிப்புகளும், உங்கள் எல்லாருக்கும் அது தெரியும். நானும் கூட அவர்களைப் பாராட்டுகிறேன் என்பதை உங்களிடம் கூற விரும்புகிறேன். என்னுடைய மனைவியும் தன்னுடைய அன்பையும் மரியாதையையும் உங்கள் யாவருக்கும் அனுப்புகிறாள். இப்பொழுது, இங்கேயுள்ள ஆசீர்வதிக்கப்பட்ட பழமையான வார்த்தையைத் திருப்புவோம். ஆனால் அதற்கு முன்பு, நாம் ஆக்கியோனாகிய அவரிடம் பேசுவோம், நாம் அதைச் செய்வதற்கு முன்னால். 35. எங்கள் அன்பு இரட்சகரே, ஜீவனுள்ளோருக்கும் மரித்தோருக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்கிறவராய் நிற்கிறவரும், இந்த அற்புதமானவரை பெற்றெடுத்த, கன்னிகையாகிய அவளின் கர்ப்பத்திற்குள் உம்மை உற்பவித்தவரும் (conceived), சர்வ வல்லமையுள்ளவரும், சிருஷ்டிகருமாகிய உம்மை நாங்கள் கிட்டி வருகையில், நாங்கள் உமது நாமத்தை சற்று நேரம் உபயோகிக்கும்படியாக வந்திருக்கிறோம், ஒரே வழி தான் உண்டு, மத்தியஸ்தரும் ஒருவரே. அவ்வாறு இருந்தாலும், ‘என் நாமத்தினாலே நீங்கள் பிதாவினிடத்தில் எதைக் கேட்டாலும், நான் அதைச் செய்வேன்’ என்ற இந்த வார்த்தைகளை எங்களுக்குக் கொடுத்த அவருடைய தெய்வீக வாக்குத்தத்தத்தை அறியும் போது, நாங்கள் மிகவும் சந்தோஷப் படுகிறோம். 36. எனவே, அன்பு தகப்பனே, உம்முடைய பிள்ளைகளின் துதிகளுக்குச் செவி கொடுக்கும் படியாக நீர் எப்போதுமே உம்முடைய பரிசுத்த ஸ்தலத்திலே கூடி வருகையில், எங்களுடைய இருதயங்களிலிருந்து நாங்கள் செலுத்தும் நன்றிகளை நீர் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று, நாங்கள் இன்று கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். சகல ஆசீர்வாதங்களுக்காகவும் நாங்கள் இன்று நன்றி உள்ளவர்களாய் இருக்கிறோம், ஆரோக்கியமாய் இருந்து, சபைக்கும், வேலைக்கும், உலகத்தைச் சுற்றிலும் எல்லா இடங்களுக்கும் போய்க் கொண்டிருப்பதற்காக நன்றி உள்ளவர்களாய் இருக்கிறோம். நாங்கள் அதற்காக மிகவும் நன்றி உள்ளவர்களாய் இருக்கிறோம். பிதாவே, நீர் தொடர்ந்து (இந்த ஆசீர்வாதங்களை) அருள வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம், தொடர்ந்து கொடுப்பது மட்டுமல்ல, ஆனால் எல்லாவிடங்களிலுமுள்ள கிரியை மேல் இரட்டிப்பானவைகளை ஊற்ற வேண்டுமென்றும் ஜெபிக்கிறோம். எங்களுக்கு இனி நேரமே இருக்காது என்று நம்புகிறோம். எல்லாமே முடிவை நோக்கிச் சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கின்றன. எப்போது என்று எங்களுக்குத் தெரியாது, ஆனால் நாங்கள் அவ்வண்ணமாக செய்யும்படி எங்கள் கர்த்தராகிய இயேசுவானவர் எங்களுக்கு நியமித்திருக்கையில், நாங்கள் ஆயத்தமாய் இருக்க விரும்புகிறோம். 37. இப்பொழுது, பிதாவே, நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். இந்தச் சிறு மகனுக்காக நானே தனிப்பட்ட முறையில் இன்று உமக்கு நன்றி செலுத்த விரும்புகிறேன். உம்முடைய வாக்குத்தத்தம் நான்கு வருடங்களாக தாமதமாகிக் கொண்டிருந்தது. ‘ஆனால் கர்த்தராகிய நான் அதை நட்டிருக்கிறேன்; அதற்கு இரவும் பகலும் தண்ணீர்ப்பாய்ச்சுவேன்.’ பிதாவே, நீர் எப்போதுமே உம்முடைய வாக்குத்தத்தங்களை உண்மையாக்குகிறீர். என்றாலும், தரிசனம் தாமதித்தாலும், இது இன்னும் பேசுகிறதாயிருக்கும். அது அவ்விதமே இருந்தாக வேண்டும், ஏனென்றால் அது வார்த்தையாயும் தேவனுடைய வாக்குத்தத்தமாகவும் இருக்கிறது. நாங்கள் பயப்படாமல் அப்படியே முன்னேறிச் சென்று கொண்டு இருக்கிறோம், சகலமும் நன்மைக்கு ஏதுவாகவே நடக்கிறது என்பதையும் அறிந்து இருக்கிறோம். 38. தாயை அதனூடாகப் பாதுகாப்போடு கொண்டு வந்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். இன்று இப்பொழுது துன்பத்தோடும் வலியோடும் இருக்கிறாள், நீர் அதிலிருந்து விடுதலை கொடுக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அது ஒரு இயற்கையான காரியம் தான் என்று நாங்கள் அறிவோம், ஆனால், பிதாவே, அவளுக்கு சுகத்தைக் கொடும். இன்று அங்கேயிருக்கும் அவளை ஆசீர்வதியும், அவள் சீக்கிரத்தில் வீட்டிற்குத் திரும்புவாளாக. 39. எஜமானின் நிமித்தமாக, தானித்தை அறுவடை செய்து, அதை களஞ்சியத்தில் கொண்டு வரும்படியாக, நாங்கள் இப்பொழுது அங்கே வெளியே யுத்த களங்களில் ஒருமித்து முன்னேறிச் செல்கையில், உமது ஊழியக்காரனின் பக்கத்தில் நில்லும். 40. இங்கேயுள்ள இந்தச் சபையை ஆசீர்வதியும். இந்த உத்தியோகத்தில் உண்மை உள்ளவராயிருக்கும் உமது ஊழியக்காரனாகிய, எங்கள் அன்பு மேய்ப்பரை ஆசீர்வதியும். டீக்கன்மார்கள், தர்மகர்த்தாக்கள் எல்லாரையும், இன்னும் எதுவாக இருந்தாலும் அவர்களையும் நீர் ஆசீர்வதிக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். அவர்கள் எல்லார் மேலும் உம்முடைய ஆசீர்வாதங்கள் தங்குவதாக. 41. இன்று காலையில், வருகை தந்திருக்கும் பாதிரிமார்களையும் (clergymen), எங்கள் வாசல்களில் உள்ள அந்நியர்களையும் நீர் ஆசீர்வதிக்க வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம், அவர்களை ஆசீர்வதியும். ஆராதனை முடியும் போது, எம்மாவூரிலிருந்து வந்தவர்களைப் போல, நாங்களும், ‘அவருடைய பிரசன்னத்தினிமித்தமாக, நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளே கொழுந்து விட்டு எரியவில்லையா-?’ என்று கூறுவோமாக. பிதாவே, வார்த்தைக்குள் எங்களைக் கொண்டு வாரும். பரிசுத்த ஆவியானவர் தாமே வந்து, வார்த்தையை எடுத்துக்கொள்வாராக. எதையுமே முன்கூட்டியே ஆழ்ந்து ஆராய்ந்து ஆயத்தம் செய்யவில்லை, என்ன பேசுவதென்றே எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவை எல்லாவற்றையும் உம்மிடமே ஒப்புவிக்கிறேன்... இயேசுவின் நாமத்தில், நீரே இதைச் செய்வீராக பேசுவீராக. ஆமென். 42. உங்களுக்கு விருப்பமானால், கொஞ்சம் வேத வாக்கியத்தை வாசிக்கும்படி சற்று திருப்புவோம். இங்கே வார்த்தையில் ஒரு சிறிய மேற்கோளுக்காக வாசிக்கும்படி, ஆதியாகம் புத்தகத்தில், 6-வது அதிகாரத்தில் தொடங்குவோம், 6-வது அதிகாரம் 8-வது வசனம் தொடங்கி. தேவனுக்குச் சித்தமானால், இன்று காலையில் பாடமானது - நாம் வியாதியஸ்தருக்காக ஜெபிப்பதற்கு முன்பதாக, அப்படியே வார்த்தையிலிருந்து ஒரு சில நிமிடங்கள் போதித்து விட்டு, அதன் பிறகு மேய்ப்பர் ஆராதனையை முடித்து வைப்பார். 43. தேவன் விருத்தியடையப் பண்ணி ஆசீர்வதிக்க வேண்டுமென்று நாங்கள் ஜெபித்துக் கொண்டிருக்கிறோம். இங்கே முன்பக்க இருக்கையில் ஒரு சிறு பெண் பிள்ளை உட்கார்ந்து கொண்டிருக்கிறதை காண்கிறேன். இங்கே தாயாரும் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று நம்புகிறேன்... கொஞ்ச நேரத்திற்கு முன்பு, அந்தப் பிள்ளைக்காக நாங்கள் ஜெபித்தோம் என்று நினைக்கிறேன். அவளால் நடக்க முடியாதிருந்தது அல்லது ஏதோவொன்று, அல்லது... என்று எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, அவளைப் போன்று தான் எனக்குத் தோன்றுகிறது. அவள் இன்று மிகவும் நலமாக இருக்கிறாள் என்பது போன்று காணப்படுகிறது, நான் அதற்காக மிகவும் நன்றி உள்ளவனாய் இருக்கிறேன். 44. இடைவிடாமல் ஜெபித்துக் கொண்டிருங்கள், அப்பொழுது தேவன் இன்னும் அதிக ஆவியையும் வல்லமையையும் எல்லாவிடங்களிலும் உள்ள தம்முடைய சபையின் மேலும் தம்முடைய ஜனங்களின் மேலும் ஊற்றுவார், நம்முடைய ஜீவியத்தின் குறைபாடுகள் எல்லாவற்றிற்கும் மேலாக நமது விசுவாசம் உயருவதாக, அப்பொழுது, நம்மில் அன்புகூர்ந்து, நமக்காக தமது ஜீவனைக் கொடுத்தவராலே இன்னும் அதிகமாக ஜெயங் கொள்ளுகிறவர்களாகவும், வெற்றி வீரர்களாகவும் இருக்க நம்மால் நிச்சயம் முடியும். இப்பொழுது, உங்கள் வேதாகமங்களை வைத்திருக்கும் உங்களிடம் தான்: நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது. நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக் கொண்டு இருந்தான். நோவா சேம் காம் யாப்பேத் என்னும் மூன்று குமாரரைப் பெற்றான். பூமியானது... தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது. தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப் போடுவேன். நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு; அந்தப் பேழையிலே அறைகளை உண்டு பண்ணி, அதை உள்ளும் புறம்புமாகக் கீல்பூசு. 45. இப்பொழுது, கர்த்தர் தாமே தம்முடைய வார்த்தையின் வாசிப்பில் தமது ஆசீர்வாதங்களைக் கூட்டுவாராக. தேவனுக்குச் சித்தமானால், நான் இந்தக் காலையில், ‘பேழை’ என்பதன் பேரில் வார்த்தையைச் சிறிது நேரம் பேச, அல்லது இன்னும் சரியாகச் சொன்னால், அதன் பேரில் போதிக்க விரும்புகிறேன், பேழை என்பதன் அர்த்தம் என்ன என்பதைக் குறித்தும், பேழை எதற்கு முந்நிழலாய் உள்ளது என்பதைக் குறித்தும், பேழையின் வகைகளைக் குறித்தும் பேச விரும்புகிறேன். பேழை பரிபூரணமாக, பழைய ஏற்பாட்டிலுள்ள ஒவ்வொன்றும் கிறிஸ்துவுக்கு மாதிரியாயுள்ளது. பழைய ஏற்பாட்டிலுள்ள எல்லாவற்றினுடைய நிறைவேறுதலாக கிறிஸ்து இருக்கிறார், கிறிஸ்து இயேசுவில் நிறைவேறியது. இப்பொழுது, அது ஒரு அழிவில் நேரமாக இருந்தது, அழிவுக்கு சற்று முன்பு இருந்த சமயம். பூமி முழுவதும் கொடுமையினால் நிறைந்திருந்தது. 46. நீங்கள் கவனிப்பீர்களேயானால், எங்கே மனிதர்கள் பெருகத் தொடங்கி, ஜனங்கள் ஒன்றாகக் கூட ஆரம்பித்து, தொடர்ந்து, பெரிய ஜனக்கூட்டமாக இருக்கிறதை நீங்கள் காண்கிறீர்களோ, அப்பட்டணமானது ஜனங்கள் குடியேறி, அதிக மக்கள் தொகை கொண்டதாய் ஆகி விடும். அப்போது நீங்கள் அறியும் முதலாவது காரியம் என்னவென்றால், அது இன்பக் கேளிக்கைக்கான device-itiesகளில் கொண்டு வரத் துவங்குகிறது, அதிலிருந்து சூதாட்டத்திற்கும், சூதாட்டத்திலிருந்து குடிப்பதற்கும், குடிப்பது - குடிப்பதிலிருந்து விபசாரத்திற்கு உள்ளும், வீடுகள் பிரிந்து போவதற்கும், விவாகம், விவாகரத்து நடப்பதற்கும், அதற்குப் பின் கொலைக்கும் செல்கிறது. அது அப்படியே ஒரு சங்கிலியைப் போல முடிவில்லாமல் தொடர்ச்சியாக வளர்ந்து, வளர்ந்து, வளர்ந்து கொண்டே போகிறது. 47. தேவன் தாமே நீதிமானோடு கூட மட்டுமே நடந்த போது, அவன் தேவனிடத்தில் தயவு பெற்றவனாயிருந்தான். ஆனால் மனிதன் பெருகத் தொடங்கி, வேறு, வேறு, வேறு காரியங்களைப் பெற்றுக் கொள்ளத் தொடங்கின போது, அவர்கள்... ஆக ஆரம்பிக்கின்றனர். நேரத்தை செலவு செய்வதற்காக சாத்தான் அதிகமான பலதிரப்பட்ட ஜனங்களை வைத்திருக்கிறான். இந்த மனிதன் கொஞ்சத்தை விசுவாசித்து, இந்த வழியாக சாய்ந்து விடுகிறான், மற்றவன் கொஞ்சத்தை விசுவாசித்து, இந்த வழியாக சாய்ந்து விடுகிறான்; பிறகு சாத்தான் உள்ளே வரும்போது, அவன் அப்படியே அதை வெடிக்க வைத்து விடுகிறான். பிறகு அது இதுவாகவும் அதுவாகவும் ஆகி, வீண் எண்ணங்கள் பெரிதாக வரத் தொடங்கி, பிறகு சீர்கேடு அடைந்து விடுகிறது. நோவா... 48. நீங்கள் கவனிப்பீர்களானால், தலைமுறைகளுக்கு இடையே, ஆபேல் கொல்லப்பட்ட பிறகு, தேவன் அவனுக்குப் பதிலாக சேத்தைக் கொடுத்தார். ஆதாமுக்கும் ஏவாளுக்கும் 70 குமாரர்களும் குமாரத்திகளும் இருந்ததாக நாம் வரலாற்றாசிரியர்கள் மூலமாக நிச்சயமாகவே கற்பிக்கப்பட்டுள்ளோம். ஆனால் வேதாகமத்தின்படி, நோவாவுக்கு காம், சேம், மற்றும்-மற்றும் யாப்பேத் என்ற மூன்று குமாரர்கள் மாத்திரமே இருந்ததாக பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளது. என்னை மன்னியுங்கள். நோவாவின் குமாரர்கள் அல்லது ஆதாமின் குமாரர்கள் காயின், ஆபேல் மற்றும் சேத் ஆகியோர் ஆவர். 49. அதன் பிறகு, அப்படியே கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். என்னுடைய ஜோசப் வந்தது பிறந்தது முதற்கொண்டு, நான் கடந்த இரண்டு நாட்களாகவே, அவ்வாறு இருந்து வருகிறேன், எனவே ஒருவிதத்தில் காரியங்களை சற்று குழப்பி விடுகிறேன். 50. பிறகு கவனியுங்கள், காமின் இந்த சந்ததியினூடாக, அவன் அங்கே அதினூடாக, ஜலப்பிரளய அழிவினூடாக கொண்டு செல்லப்பட்ட பிறகு, நாம் - அவனுடைய முழு சந்ததியும் துன்மார்க்கத்திற்குள் மறைந்து விட்டது. 5-!. நாம் காயினுடைய சந்ததியினூடாக வரும் போதும், அது அதே காரியத்தையே செய்தது. அவர்கள் நோத் தேசத்திற்குள் புறப்பட்டுச் சென்றார்கள், காயின் புறப்பட்டுச் சென்று, அங்கே விவாகம் செய்து, தன்னுடைய மனைவியை அழைத்துக் கொண்டு அங்கு சென்றான், பின்வந்த மனிதன் இராட்சதர்களைப் போன்று ஆகத் தொடங்கினான். 52. இஸ்ரவேல் புத்திரர்கள் அங்கு அதன் வழியாக வந்த போது, அவர்கள் அந்த மனிதர்களைக் கண்டனர், அவர்களில் சிலர் 4 அங்குல நீளமுள்ள விரல்களைக் கூட கொண்டிருந்தனர். அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள், பெரிய இராட்சதர்கள். ஒரு பெரிய ஆளாக இருந்த கோலியாத்தை தாவீது கொன்று போட்டான், அவனுடைய ஈட்டி நெசவுக்காரரின் கூர்முனை காரியத்தைப் (needle) போலக் காணப்பட்டதாக அவன் கூறினான். மேலும் எத்தனை... அவன் 9 அடி உயரமுடையவனாய் இருந்தான் மற்றும் ஏதோவொன்று, அவன் என்னவொரு பெரிய ஆளாக இருந்தான். 53. ஆனால் நீங்கள் கவனிப்பீர்களானால், அங்கே முற்காலத்து காயீனின் சந்ததியினூடாக ஒரு பெரிய நாகரீகம் வருகிறது, அது உள்ளே வரத்தொடங்கியது. மனிதர்கள் பெருகத் தொடங்கிய போது, அவர்கள் வித்தியாசமான கல்விகளின் பின்னாலும், மற்றவைகளின் பின்னாலும், காரியங்களை கண்டு பிடித்தலுக்கும், புதிய கண்டுபிடிப்புகளின் பின்னாலும் போகத் தொடங்கினர். ஒரு மகத்தான மரவேலை செய்பவர்கள், ஓ, அவர்கள் எப்படியாக கட்டினார்கள் மற்றும் கட்ட கட்ட கட்டத் தொடங்கினார்கள், முடிவு நேரம் சமீபமாயிருந்தது என்பதற்கு அது ஒரு அடையாளமாக இருந்தது. இப்பொழுது நாம் பெற்றிருப்பது போன்ற கட்டிடங்களை நீங்கள் எப்பொழுதாவது கண்டது உண்டா-? அது மீண்டும் கடைசி காலத்தின் அடையாளமாக உள்ளது. அவர்கள் மகத்தான உலோக வேலை செய்பவர்களாக இருந்தனர். அவர்களால் எவ்வாறு முடியும் என்றும் அவர்கள் உலோகத்தைக் கொண்டு என்ன செய்யக் கூடும் என்றும் அவர்கள் கண்டு பிடித்தனர். 54. இன்று அவர்கள் உலோகத்தைக் கொண்டு என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்று பாருங்கள்... கூட உருவாக்குகிறார்கள். இப்பொழுது எஃகு அல்லது உலோக வீடுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் அன்றொரு நாளில் ரேடியோவில் கேட்டேன். அவர்கள் எல்லா மரத்துண்டுகளையும் கைதேர்ந்தவிதமாய் செதுக்குகின்றனர், எனவே அவர்கள் அலுமினியத்தைக் கொண்டும், எஃகைக் கொண்டும் மற்றவைகளைக் கொண்டும் அவைகளை உண்டாக்குகின்றனர். கல்வியின் மகத்தான கண்டு பிடிப்புகளும், விஞ்ஞானத்தின் மகத்தான செயல்பாடுகளும், விஞ்ஞானத்தின் முன்னேற்றங்களும், முடிவு காலத்திற்கான ஒரு அடையாளமாக இருக்கின்றன... 55. விஞ்ஞானமானது கடந்த சில வருடங்களில் செய்திருப்பதைப் பாருங்கள். ஓ, என்னே, அப்படியே செய்யப்பட்டுள்ள காரியங்கள். அது என்ன-? முடிவு நேரம் அருகாமையிலுள்ளது. ஒரு அடையாளமாக உள்ளது, எல்லா விசுவாசிகளும்... பிரசங்க பீடத்திலுள்ள ஊழியக்காரர்கள் தங்களுடைய முழு ஆற்றலோடும் அதைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு காண்பிக்க வேண்டும். நாம் முக்கியமான கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறோம். எல்லா காரியங்களும் முடிவை நோக்கியே சுட்டிக் காட்டுகின்றன. 56. இந்த வேத வாக்கிய வசனம், இன்று நாம் வாசித்து விசுவாசிக்கும் தேவனுடைய வேதாகமமானது முடிவை நோக்கியே சுட்டிக் காட்டுகிறது, அதிக தூரமில்லை. மகத்தான விஞ்ஞான உலகமானது முடிவு அருகாமையில் உள்ளது என்று கூறுகிறது, மற்றொரு மகத்தான முக்கிய கட்டம். நாட்காட்டியிலும் மற்றவைகளிலுமுள்ள இராசி மண்டலமும் வானியலும் மற்றும் ஒவ்வொன்றுமே முடிவு சமீபமாயிருக்கிறது என்று தான் கூறுகிறது. கூர்நுனி கோபுரம் முடிவு அருகாமையில் உள்ளதைக் கூறுகிறது. ஒவ்வொரு மகத்தான சுட்டிக்காட்டும் இடமும் முடிவு அருகாமையில் இருக்கிறது என்பதையே கூறுகிறது. நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். 57. கவனியுங்கள். ஆனால் தேவன் தம்முடைய இராஜாதிபத்திய கிருபையில், முடிவு காலத்திற்கு முன்பாக... அவர் அதை இப்பொழுது இயேசுவைக் கொண்டு குறிப்பிட்டுப் பேசுகிறார்: இயேசு, ‘ஜலப்பிரளயத்திற்கு முன்பாக நோவாவின் நாட்களில் எப்படி நடந்ததோ, ஜனங்கள் என்ன செய்து கொண்டிருந்தார்களோ, அப்படியே மீண்டும் சம்பவிக்கும்’ என்று கூறினார். நாம் அதைக் காண்கிறோம். ஆகையினால் நாம்-நாம் அப்படியே ஆவிக்குரிய பிரகாரமாக குருடாய் இருக்க வேண்டும், அல்லது நம்மால் அதைக் காண முடியும். திறந்து, சுற்றிலும் நோக்கிப் பாருங்கள். 58. சரீர பிரகாரமான குருட்டுத்தனத்திற்கும் ஆவிக்குரிய குருட்டுத்தனத்திற்கும் இடையே அவ்வளவு பெரிய ஒரு வித்தியாசம் உள்ளது. நான் என்னுடைய தெரிந்து கொள்ளுதலைச் செய்ய வேண்டுமானால், சரீர பிரகாரமான குருட்டுத்தனத்தையே எந்த நேரத்திலும் எடுத்துக் கொள்வேன் என்று நம்புகிறேன். ஆம். குருடாய் இருப்பது என்பது அப்படிப்பட்ட ஒரு காரியமாய் உள்ளது. இங்கே கொஞ்ச காலத்திற்கு முன்பு, ஒரு ஊழியக்காரர், ‘நீ ஒரு கர்த்தருடைய ஊழியக்காரனாய் இருப்பாய் என்றால், என்னைக் குருடாக்கு’ என்றார். நான், ‘நீ ஏற்கனவே குருடாக இருக்கிறாய்’ என்றேன். அவர், ‘நான் குருடனா-?’ என்றார். 59. நானோ, ‘ஆம், ஐயா’ என்றேன். ஏனென்றால் அவர் தெய்வீக சுகமளித்தலைக் கேலி செய்து, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைக் கேலி செய்து, அப்படிப்பட்ட ஒரு காரியமே இல்லை என்றார். நான், ‘நீ குருடாய் இருக்கிறாய்’ என்றேன். அவர், ‘இல்லை, அது கொஞ்சம் உன்னுடைய சொந்த கற்பனை’ என்றார். நானோ, ‘அது வேத வாக்கியமாயுள்ளது. வேதாகமம் அவ்வாறு கூறியுள்ளது’ என்றேன். அவர், ‘எப்பொழுது மனது குருடாகிப் போனது-?’ என்று கேட்டார். 60. நான், ‘நல்லது, அனேக சமயங்களில். இயேசு உன்னுடைய பிதாக்களிடம் கூறினார், ‘நீங்கள் குருடரான பரிசேயர்கள். உங்களுக்கு கண்களிருந்தும், உங்களால் காண முடியவில்லை’ என்றார். அது சரியே. ‘ஆனால் இந்த வேளையை நீ அறிந்திருந்தாயானால்...’ என்று கூறினேன். 61. நான், ‘ஒரு சமயம் அந்த மகத்தான தீர்க்கதரிசியாகிய எலியா தோத்தானில் இருந்தான். எலியாவைப் பிடிக்கும்படி அங்கே முழு சீரிய இராணுவமும் சூழ்ந்து கொண்டது. கேயாசி கூறினான்...-?... ‘தகப்பனே, அவர்கள் நமக்கு மேல் இருக்கிறார்கள். இங்கே முழு பட்டணமும் சீரிய இராணுவத்தால் சூழப்பட்டுள்ளது’ என்றான். அவனோ, ‘நல்லது, அவர்களோடிருப்பவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்’ என்றான். அவன், ‘நல்லது இப்பொழுது, அவர்கள் இதோ இருக்கிறார்கள், ஆனால் உம்மைத் தவிர வேறு யாரையும் என்னால் காண முடியவில்லையே’ என்றான். ‘தேவனே, இவனுடைய கண்களைத் திறந்தருளும்’ என்றான். அவனுடைய கண்கள் திறக்கப்பட்ட போது, அந்த வயதான தீர்க்கதரிசியைச் சுற்றிலும் அக்கினிமயமான இரதங்களாலும், அந்த மலைகள் எரிந்து கொண்டிருக்கிறதாகவும்...-?... அவன் கண்டான். 62. அவன் சரியாக அவர்கள் இருந்த இடத்திற்கு நடந்து சென்று, அவன் அவர்களைக் குருடாக்கிப் போட்டதாக கூறினான். பிறகு வெளியே நடந்து சென்றான்...-?... சரீரபிரகாரமாக அல்ல. ஒருவிதத்தில், அவர்கள் சரீரபிரகாரமாக குருடாய் இருந்தனர். அவன் வெளியே சென்று, ‘நீங்கள் எலிசாவையா தேடிக் கொண்டிருக்கிறீர்கள்-?’ என்றான். அவன் தானே எலிசாவாக இருந்தான். அவர்கள், ‘ஆமாம், நாங்கள் அவனைத் தான் தேடிக் கொண்டிருக்கிறோம்’ என்றார்கள். ‘என் பிறகே வாருங்கள், நான் சரியாக உங்களை அவனிடம் வழிநடத்துவேன்’ என்றான். அவர்களுக்கு அது தெரியவில்லை. அவர்கள் குருடாயிருந்தனர். 63. இன்று, மனிதர்கள் குருட்டுத்தனத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர், ஏனென்றால் அவர்கள் தேவனை, இரக்கத்தைப் புறக்கணிக்கிறார்கள். நியாயத்தீர்ப்பு மாத்திரமே மீதியாக விடப்பட்டுள்ளது. ஆனால் எப்பொழுதுமே தெய்வீக நியாயத்தீர்ப்பு தாக்குவதற்கு முன்பாக, தேவன் தம்முடைய அன்பினாலும் இரக்கத்தினாலும், மிகவும் ஏற்ற ஒரு வழியைக் கொண்டிருக்கிறார், அங்கே ஒரு வழி உள்ளது. அந்த வழியைப் பின்பற்ற வாஞ்சையுள்ள யாவரும் தப்பிக்கொள்ளும்படியான ஒரு வழியை தேவன் உண்டாக்குகிறார். அது தான் அவருடைய இரக்கங்களாகும், தப்பிக்கும்படியான ஒரு வழியை உண்டாக்குதல். ‘யாரும் கெட்டுப்போகும்படி விரும்பாமல், எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்புகிறார்.’ 64. அவர் அடையாளங்களையும் அற்புதங்களையும் காண்பிக்கிறவராக இன்று உலகத்தில் இருக்கிறார், மேலும் ஜனங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறார், மகத்தான காரியங்கள் சம்பவித்துக் கொண்டிருக்கின்றன, மேலே வானத்திலும், பூமியிலும் அடையாளங்கள் காண்பிக்கப்படுகின்றன, அடையாளங்கள். வானத்தினூடாக பறக்கும் தட்டுகளின் அடையாளங்கள், பென்டகனும் எல்லாரும் கூட அதைக் குறித்து என்ன முடிவு செய்வது என்று அறியாதிருக்கிறார்கள். மேலே வானத்திலும் பூமியிலும் அடையாளங்கள், வியாதியஸ்தர் சுகமடைதல், மரித்தோரை உயிரோடெழுப்புதல், குருடரின் கண்கள் திறக்கப்படுதல், அசுத்த ஆவிகளைத் துரத்துதல், சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுதல் போன்றவை அவருடைய வருகைக்கு முன்பாக சம்பவிக்கிற அடையாளங்கள். ‘யாரும் கெட்டுப் போக வேண்டுமென்று விரும்பாமல், எல்லாரும் தாழ்மையுடனும் இனிமையுடனும் மனந்திரும்பும்படி கீழ்ப்படிய வேண்டுமென்று விரும்புகிறார்.’ ஆனால் கிறிஸ்துவைப் புறக்கணிக்கிறவர்கள் குருடராய் நடக்க வேண்டியுள்ளது. 65. நான் இன்று பார்க்க மறுத்து, அது அழிந்து போகும்படி விட்டால் என்னவாகும்-? என்னுடைய கண்களால் தொடர்ந்து (பார்க்கும்படி) நான் மறுத்தால், ஏதோவொன்றை நான் எடுத்துக் கொண்டு, அவைகளைச் சேதமடையச் செய்து விடுகிறேன். அப்படியானால், காண எனக்கு விருப்பமில்லை. 66. அதே விதமாகவே ஆவிக்குரிய பிரகாரமாகவும் உள்ளது. ஒரு மனிதன் தேவனுடைய வார்த்தையை நோக்கிப் பார்க்கவும், அந்தத் திட்டத்தைக் காணவும், தேவனைக் காணவும் மறுப்பானானால், அவன் தானாகவே தன்னுடைய கண்களுக்குத் தொல்லை ஏற்படுத்திக் கொள்கிறான். அவன் தானே தேவனுடைய காரியங்களுக்கு தன்னுடைய கண்களை அடைத்துக் கொள்கிறான். என்னவொரு நாள். என்னவொரு வேளை. நாம் இன்று சுற்றிலும் நோக்கி முடிவு காலத்தைப் பார்த்து நிச்சயமாக கற்றுக் கொள்ள வேண்டியது என்னவொரு பாடமாக உள்ளது. 67. ஆனால், நோவாவின் நாட்களில், தேவன் தம்முடைய இராஜாதிபத்திய கிருபையினால், அவர், ‘இப்பொழுது, நீங்கள் வெளியே போய், இந்த நியாயத்தீர்ப்புக்கு தப்பிக்கொள்ள விரும்புகிற எல்லாருக்கும் ஒரு முன்னேற்பாட்டை உண்டாக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்’ என்றார். அது அற்புதமாயில்லையா-? தேவன், யாரும் கெட்டுப்போக வேண்டு மென்று விரும்பாமல், தேவனுடைய தப்பித்துக் கொள்ளும் வழியில் வர விரும்புகிறவர் களுக்காக தப்பித்துக்கொள்ளும்படியான ஒரு வழியை உண்டுபண்ணுகிறார்... எனவே அவர், ‘நோவா, நீ ஒரு பேழையை உண்டாக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்’ என்று கூறினார். 68. இப்பொழுது, ‘பேழை’ என்ற வார்த்தையானது, ‘ஒரு சிறு பெட்டி அல்லது தப்பித்துக் கொள்ளும்படியான ஒரு இடம், ஒரு மறைவிடமாக’ இருக்கிறது. அவைகளில் மூன்றைக் குறித்து பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளது. நாம் இப்பொழுது சிறிது நேரம் அந்த மூன்றையும் பார்க்க விரும்புகிறோம். அந்த எல்லா மூன்றும் இன்று சபைக்கு ஒரு மகத்தான பேழையாயிருக்கும் கிறிஸ்துவுக்கு மாதிரியாயிருந்தது. மூன்று என்பது ஒரு உறுதிப்பாடாக இருக்கிறது, எல்லா பழைய காரியங்களும் அப்படியே முன்னடையாளமாக இருக்கிறது. 69. நான் அன்றொரு நாள் வெளியே ஒரு சிற்றோடையின் கரையில் உட்கார்ந்திருக்கையில், அங்கே முற்காலத்தில் கோத்திரப் பிதாக்களை பெற்றெடுத்த அந்த எபிரேய தாய்மார்கள் ஒவ்வொருவரும் எப்படியாக, பிரசவ நேரத்தில், அவள் முன்னால் வரும்போது, அவன் எப்படி இருப்பான் என்றும், கடைசி நாளில் அவன் என்னவாக இருப்பான் என்றும் கூறி, அவனுடைய பெயரை உச்சரித்தாள் என்றும் நான் வாசித்துக் கொண்டிருந்தேன்; அவள் என்ன செய்து கொண்டிருந்தாள் என்பதை அறியாமலேயே முணுமுணுத்தவாறு பேசினாள். ஆதி,49-ஐ பிடித்துக் கொண்டு, அதை எழுதி வைத்துக் (type out) கொள்ளுங்கள், அவர்களுடைய கடைசி காலம் எங்கே இருக்கிறது என்றும், அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றும், அது என்னவென்றும் கவனியுங்கள். அது சரியாக அங்கே இருக்கிறது. என்னே. 70. எப்படியாக, சில சமங்களில், நாம் மாத்திரம் நம்முடைய கண்களைத் திறந்து, நம்முடைய ஆவிக்குரிய செவி கொடுத்தலை திறக்க முடியுமானால், வார்த்தை புறப்பட்டுச் செல்லும் போது, அது என்வென்று நாம் உணர்ந்து கொள்வோம், ஆவியானவர் நமக்கு வெளிப் படுத்துவார்... பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய இந்தக் காரியங்களை எடுத்து, இங்கே இருக்கும் ஒவ்வொரு மனிதன், பெண், பையன், சிறு பெண்-ஆகியோரின் இருதயத்திற்குள் அவைகளை வைக்க வேண்டுமென்று நான் இப்பொழுது ஜெபிக்கிறேன். 7-!. பேழை. நோவா அவைகளில் ஒன்றைக் கட்டினான், தப்பிக்கும்படியான ஒரு வழி. இரண்டாவது கூறப்பட்டிருப்பது மோசே வைக்கப்பட்டிருந்த ஒன்றாகும். மூன்றாவது இஸ்ரவேலருக்கான சாட்சி பெட்டி ஆகும். நான்காவது கிறிஸ்து இயேசுவாயிருக்கிறது, எல்லாம் இந்த நான்காவதில் நிறைவுபெறுகிறது. 72. நாம் இப்பொழுது திரும்பிச் சென்று முதலாவது ஆதியாகமத்தில் ஆரம்பிப்போம், பேழைக்காக செய்யப்பட்ட ஆயத்தம் எவ்வாறு இருந்தது என்றும் அது கிறிஸ்துவுக்கு மிகச் சரியான மாதிரியாக இல்லையா என்றும் பார்க்கலாம். ஒவ்வொரு பேழைக்குள்ளும் கூடி வந்தவர்கள் எல்லாரும் அல்லது அதன் கீழாக – பேழை மூலமாக ஒப்புரவாகும்படி வந்தவர்கள் எல்லாரும் நியாயத்தீர்ப்பினூடாகக் காக்கப்பட்டனர். அவர்கள் அப்படியே அவ்வளவு நிச்சயமாக பேழைக்குள் பாதுகாப்பாக இருந்தால், நாம் கிறிஸ்துவுக்குள் எவ்வளவு அதிகமாக பாதுகாப்பாக இருக்க வேண்டும், அவர் எல்லா பேழைகளுக்கும் உண்மையான முன் அடையாளமாக (முந்நிழலாக) (antitype) இருக்கிறார். ஓ, அவர் அற்புதமானவர். 73. பிறகு, நாம் அங்கே பின்னால், தேவன் நோவாவிடம் கூறினதைக் கவனிக்கிறோம், அவர், ‘நீ இதை பிரத்தியேகமான ஒரு வகை மரத்தைக் கொண்டு உண்டாக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்’ என்றார். இப்பொழுது, அப்படியே எந்த மரமும் கிரியை செய்யாது. நாம் ஒரு குறிப்பிட்ட வகை (மரத்தைக்) கொண்டிருக்க வேண்டும், அது நிச்சயமாக கொப்பேர் மரமாக இருக்க வேண்டும். இப்பொழுது கொப்பேர் மரம் என்பது... ஒரு சில வாரங்களுக்கு முன்பு, கொப்பேர் மரமென்றால் என்னவென்று படித்துக் கொண்டிருந்தேன். அது ஒரு மிருதுவான, எளிதில் வளையக்கூடிய மரம் ஆகும். அதைக் கொண்டு தான் பேழை உருவாக்கப்படுகிறது, அந்த மரம் எளிதில் பொருந்தும்படியான ஒரு வளையக்கூடிய மரமாகும். 74. அது தான் விசுவாசி. ஒரு விசை தேவனுடைய கரங்களிலிருந்து, மரமாகிய அவனுடைய சொந்த சுயநீதியிலிருந்து வெட்டப்பட்டு, அவன் அந்த கட்டிட கலைஞரின் கரங்களில் வளைந்து கொடுக்கக் கூடியவனாய் (pliable) ஆகிறான். அவன் ஒவ்வொரு உபதேசக் காற்றுக்கும் தூக்கி எறியப்படாமல், எளிதாக உபயோகிக்கும் வகையில் சரியாக தேவனுடைய வார்த்தைக்குள் பொருத்தப்படும் வகையில் வளைந்து கொடுக்கக்கூடிய ஒருவனாகிறான். 75. மேலும் அது ஈரப்பதத்தை எளிதாக உறிஞ்சும் ஒரு மரமாக இருந்தது என்பதை நாம் கவனிக்கிறோம், அது ஈரப்பதத்தை உறிஞ்சும் மரம். இப்பொழுது, ஒரு காரியம் என்ன என்றால், தேவனுடைய கரங்களில் வளைந்து கொடுக்கிறவனாக இருக்கும் ஒரு மனிதன் தேவனுக்கு ஒரு மகத்தான காரியமாக இருக்கக் கூடும், அல்லது நீங்கள் பிசாசுக்கு ஒரு மகத்தான காரியமாக இருக்கக் கூடும். 76. இப்பொழுது, வளைந்து கொடுக்கக் கூடியதும், தண்ணீரால் உறிஞ்சக் கூடியதுமான மரத்தைக் கொண்டு அந்தப் பேழையானது கட்டப்பட்டிருந்தால், சிறிது நேரத்தில் தண்ணீரில் மிதக்க முடியாத அளவில் தண்ணீரினால் உறிஞ்சப்பட்டிருக்குமே ஒழிய அது மிதக்காது. அது கனமானதாகி உடனடியாக மூழ்கி விடும், ஏனென்றால் கொப்பேர் மரமானது மிகவும் எடை குறைந்த மரமாகும். தண்ணீர் சரியாக அதனூடாக உறிஞ்சப்பட்டு விடும். 77. எனவே, இன்றும் நான் அதைதான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். இது தான் அது. இன்று அநேக உத்தமமான மனிதர்களிடமும், ஸ்திரீகளிடமும் உள்ள தொல்லை என்னவென்றால், அவர்கள் முற்றிலுமாக தங்களை ஒப்புவிக்க விரும்பாமல், தவறான செயல்களுக்குப் பின்னால் செல்கின்றனர் என்று நான் இன்றைய தினம் நம்புகிறேன். அதன் காரணமாகத்தான் பேழையானது தண்ணீரில் மிதக்க முடியாமல் மூழ்கக் கூடியதாக (waterlogged) ஆகி, அதற்கு மேலும் அதிக தூரம் போக முடியவில்லை. அவள் மேலும் கீழும் சென்று, ஏறக்குறைய மூழ்க ஆயத்தமாய் இருக்கிறாள். 78. எனவே அங்கே எம்மாதிரியான ஒரு பரிசுத்த ஆவி பாதையை உண்டாக்கினது-? ஆனால் அது... அவர்கள் இதைப் போன்று தொடர்ந்து போக முடியாது. எனவே தேவன் நோவாவிடம், ‘உள்ளும் புறம்பும் இருபுறங்களிலும் அதற்கு கீல் பூசு, அதற்கு கீல் பூசு’ என்றார். 79. பிறகு கீலானது எதிலிருந்து செய்யப்பட்டது என்று அறிய முயன்று கொண்டிருந்தேன். நான் திரும்பிச் சென்று அதைப் புரிந்து கொண்டேன், ஒரு பழைய அகராதிக்கு திரும்பிச் சென்று கீல் என்றால் என்னவென்பதைக் கண்டுபிடிக்கத் தொடங்கினேன். கிரேக்க பாஷையில், கீல் என்பது ஒரு காரியம், அதுவும் ஒரு பொருளை அர்த்தப்படுத்துகிறது என்பதை கண்டு கொண்டேன். ஆனால் அவர்களுக்கு கீல் எவ்வாறு கிடைத்தது, அவர்கள் வேறொரு மரத்திலிருந்து அதை உடைத்தெடுக்கின்றனர். அது கெட்டியான ஒரு பிசினைப் போன்று இருந்தது, அவர்கள் அதை உடைத்தெடுத்து, அதைக் காய்ச்சி, பிறகு அதன் மேல் அதை ஊற்றினர். அது கீலாகி விடுகிறது. 80. என்னவொரு அழகான காரியம், அந்த மரமானது வெட்டப்படுவதற்கு முன்பு, ஒரு குறிப்பிட்ட வகையான ஒரு மரத்துண்டு, மனிதனாக இருத்தல், கிறிஸ்து தம்முடைய தாழ்மையில் மனிதனாக இருந்தார். இன்று அவருடைய பேழையாகிய சபையானது, அவருடைய சபைக்குள் வருதல், அது இங்கே பூமியிலுள்ள அவருடைய ஆவிக்குரிய சரீரத்தைக் காட்டிலும் அதிகமாக அல்ல... அந்தி கிறிஸ்துவானது வெட்டப்பட்டு, அவரை விட்டு ஜீவனானது உடைத்தெடுக்கப்பட்டு, அது சபைக்குள் ஊற்றப்பட வேண்டும். 8-!. இப்பொழுது, அவர்கள் இந்த மிருதுவான கொப்பேர் மரத்தின் மீது இந்த சூடான கீலை ஊற்றும் போது, இது மிகவும் துரிதமாக அதை உறிஞ்சி, அதை உள்ளும் புறம்பும் பத்திரமாக அடைத்து வைக்கிறது. ஆமென். ஓ, நீங்கள் அதைக் காண்கிறீர்களா-? ஒரு முத்திரை: மிருதுவாக தேவனுடைய வார்த்தையில் உறிஞ்சி விடுகிறது, கிறிஸ்து பரிசுத்த ஆவியை ஊற்றி, அனலுண்டாக்குதல். ஆமென். அது குளிர்ந்து போகும் போது, வழிந்து ஓடாது. அது சூடாயிருக்க வேண்டும். நமக்கு இன்று தேவையாயிருப்பது என்னவென்றால், ஒரு பழைமை நாகரீகமான பரிசுத்தாவி கூட்டமும், அனலுண்டாக்குதலும், ஊற்றப்படுதலும் தான். 82. அவர்கள் அந்த மிருதுவான கொப்பேர் மரத்தை எடுத்து, பெரிய கரண்டியால் அதன் மேல் கீல் ஊற்றி, மிக மிருதுவான அந்தக் கொப்பேர் மரமானது ஆயத்தப்படுத்தப்படுகிறது, அப்போது அந்தக் கீலானது உள்ளும் புறம்பும் பாய்ந்து செல்லும் போது, அது எஃகைப் போன்று இறுகி கடினமாகிறது. வெள்ளம் அதற்குள் கசிந்து ஒழுகிச் செல்லவே முடியாது. அது ஒரு பாதுகாப்பாக இருந்தது. 83. கிறிஸ்துவிடம் வந்து அவரை ஏற்றுக் கொண்டு, அவன் பரிசுத்தாவியால் சுற்றப்படும் ஒவ்வொரு மனிதனும், அவன் கிறிஸ்துவைத் தவிர வேறு எதையும் பார்க்காமல் இருக்கும் அளவுக்கு அவ்வளவாக ஒரே மனது உள்ளவனாக ஆகிறான். இனி மேலும் அவன் உலகத்திற்காக கவலைப்படுவதே இல்லை. நீங்கள் அவன் மேல் மோதலாம், அவன் மேல் பாய்ந்து தாக்கலாம், அவனை எட்டி உதைத்து வெளியே தள்ளலாம், நீங்கள் விரும்பும் ஒவ்வொன்றையும் செய்யலாம், ஆனால் அவனோ மூடப்பட்டிருப்பான். வேறு வார்த்தைகளில் கூறினால், அவன் முத்திரை இடப்பட்டிருக்கிறான். எல்லா கீறல்களும் அடைக்கப்படுகிறது, அவர்கள் கீலைக் கொண்டு அதைத் தான் செய்தார்கள். வேதாகமம் கூறுகிறது... 84. இன்று இந்தப் பேழையுடனான இதற்கான முத்திரையிடப்படுதல் என்பது என்னவென்று நீங்கள் அறிவீர்களா-? எபேசியர் 4:30 ‘நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்தாவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்’ என்று கூறுகிறது. ஆமென். வெள்ளம் உட்புகாமல் எல்லாவற்றையும் அடைப்பது, மரத்தின் ஒவ்வொரு சிறிய பகுதியையும், தண்ணீர் வெளியேறும் ஒவ்வொரு சிறிய வழியையும், ஒவ்வொரு சிறிய துளையையும், ஒவ்வொரு சிறிய கீறலையும், மரத்திலுள்ள ஒவ்வொரு சிறு நுண்துளையையும் அப்படியே பரிசுத்தாவியால் அடைத்து மூடுதல். ஓ, எவ்வளவு அற்புதமானது. 85. பாருங்கள், நீங்கள் அதை குளிரில் வைத்திருந்தால், நீங்கள் அதற்குள் காற்றுத் துளைகளை கொண்டிருப்பீர்கள். நீங்கள் எப்பொழுதாவது ஒரு வெட்டப்பட்ட மரத்துண்டை அல்லது ஏதோ ஓன்றை அடிப்பீர்களானால், அது நிச்சயமாக அதை உடைத்து விடும், ஏனென்றால் அதில் வெடிப்பு இருந்தது. ஆனால் அதை சூடாக்கி, அதன் மீது ஊற்றுவீர்களானால், என்றாலும் அது முழுவதும் போய், இருபுறங்களிலும் உள்ளும் புறம்பும் அதை அடைத்து விடும். ஆமென். 86. கிறிஸ்துவுக்கும் அவருடைய சபைக்கும் பரபூரண மாதிரி. ஒரு மரம் எப்படியாக வெட்டப்பட்டு, அடிக்கப்பட்டு காயப்பட்டு அந்த எல்லா சாறுகளும் (juice) அதைவிட்டு வெளியே எடுக்கப்பட்டு, பிறகு அந்த மரத்தை நியாயத்தீர்ப்பினூடாக பாதுகாக்கும்படி வேறொரு மரத்தில் ஊற்றப்பட வேண்டியிருந்தது. கிறிஸ்து வெட்டப்பட்டார், அது அவருடைய ஜீவனின் ஊடாகவும், பரிசுத்தாவியானவரின் மூலமாகவும், சபையானது நிச்சயமாக நியாயத் தீர்ப்பினூடாக எடுத்துக்கொண்டு போகப்பட்டது. அதைக் காண்கிறீர்களா-? என்னவொரு அழகான காட்சி. ஓ, என்னே. அது உங்களை சிலிர்ப்பூட்டுகிறது, இல்லையா-? அது அப்படியே உங்கள் இருதயத்தை முன்னும் பின்னும் துள்ள செய்கிறது. பாருங்கள்-? அதைக் குறித்த எல்லாமே கிறிஸ்துவைக் குறித்து பேசிக் கொண்டிருக்கின்றன, பழைய ஏற்பாட்டிலுள்ள ஒவ்வொன்றும் கிறிஸ்துவைப் பற்றியதாய் இருந்தது, அதன் முந்நிழலாய் இருக்கிறது. 87. அன்றொரு நாள் யாரோ ஒருவர் சொன்னார்; அவர், ‘சகோதரன் பிரன்ஹாமே, இது ஏன் சம்பவிக்கிறது, அது ஏன் சம்பவித்தது-?’ என்றார். நல்லது, அவர் இப்பொழுது இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார். நான் ஒரு மேசையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். 88. நான், ‘சகோதரியே, இந்த எல்லா காரியங்களை விட்டும் திரும்பி வாருங்கள், தொடக்கத்திற்கு திரும்பி வாருங்கள்’ என்றேன். நான், ‘முதலாவது காரியம் என்னவெனில் அந்த நபர் வேறு யாரும் இருப்பதற்கு முன்பாக, அங்கே ஒரு உயிரணு இருப்பதற்கு முன்பே அவர்கள் ஆவியாக இருந்தனர். அது தான் அடிப்படையான பகுதி. அந்த ஆவியை சரியாக காத்துக் கொள்ளுங்கள். அந்த ஆவியிலிருந்து இந்த வழியில் வரும் ஒவ்வொன்றும் அழிந்து விடும், அது வீடுகளாக இருந்தாலும், நிலங்களாக இருந்தாலும், இல்லங்களாக இருந்தாலும், ஆரோக்கியமாக இருந்தாலும், அது என்னவாக இருந்தாலும், அது அழிந்து போகக் கூடியது, அது மீண்டும் அந்த ஆவியிடம் சரியாக நேராக திரும்பிப் போகும்’ என்றேன். அல்லேலூயா. சரியாக மீண்டும் ஆவியிடம் திரும்புகிறது, எனவே அதை சரியாக காத்துக் கொள்ளுங்கள். 89. நீங்கள் இங்கே இவ்வுலகத்தில் என்ன பெற்றிருக்கிறீர்கள் என்றோ என்ன பெற்று இருக்கவில்லை என்றோ அது ஒரு பொருட்டல்ல, உங்கள் இருதயத்தை தேவனுடன் சரியாக ஒரே இசைவாக காத்துக் கொள்ளுங்கள். எல்லாமே, ஒவ்வொன்றும், உங்களுடைய எல்லா வீடுகளும் நிலங்களும் உங்களுடைய எல்லா பணமும், உங்களுடைய எல்லா வியாதிகளும், உங்களுடைய எல்லா ஆரோக்கியமும், உங்களுடைய எல்லா பிள்ளைகளும், எல்லாமும், இங்கே இந்த உலகத்தில் நீங்கள் பெற்றிருக்கும் ஒவ்வொன்றும், ஒவ்வொன்றும் உங்களை விட்டுப்போய் விடும், நீங்கள் மீண்டும் சரியாக நேராக தொடக்கத்திற்கே திரும்பிப் போவீர்கள். அது தேவனுடன் சரியாக இருந்தால், ஒரு தேவன் பரலோகத்தில் இருப்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக நீங்கள் மீண்டும் வருவீர்கள். அது தேவனுடன் சரியாக இல்லை என்றால், நீங்கள் மற்ற பாதையை எடுத்துக் கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. நீங்கள் இங்கே ஒரு தெரிந்து கொள்ளுதலை செய்வதற்காக இருக்கிறீர்கள். இன்றே கிறிஸ்துவுக்காக அதைச் செய்யுங்கள். 90. கவனியுங்கள். ஓ, என்னே. வேறொரு காரியம் என்னவென்றால், அந்த வார்த்தையின் அர்த்தம், ‘அதற்கு கீல் பூசு, கீல் பூசு’ என்று கூறும் போது, அதற்கு தார்பூசு என்றோ அல்லது கெட்டியான பிசினைக் கொண்டு அதன் ஈரத்தை உறிஞ்சு என்றோ பொருள்படும், அதற்கு ‘பரிகாரம் செய்ய’ என்று அர்த்தம். இப்பொழுது, ‘கீல் பூசு’ என்ற வார்த்தைக்கு ‘பரிகாரம் செய்ய’ என்று அர்த்தம். லேவியராகமத்தில் - ஆதியாகமத்தில் கீல் (pitch) என்பதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே வார்த்தை தான், லேவியராகமத்தில் ஒரு பரிகாரம் (an atone) என்பதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது, ஒரு பரிகாரத்தைச் செய்வதற்கு. நல்லது, இப்பொழுது பரிகாரம் என்பது இடையே நிற்றல் என்பதாகும். பேழையில், கொப்பேர் மரத்தில் இருந்த கீலானது, உள்ளே நுழையாமல் தடுப்பதற்காக இருந்தது, அல்லது அந்த கோபத்திலிருந்து விசுவாசிக்கு பரிகாரம் செய்ய. உங்களுக்கு அது புரிகிறதா-? 9-!. நோவா நியாயத்தீர்ப்பின் வெள்ளமாகிய கோபத்திற்குள் பிரவேசிக்க முடியவில்லை. ஓ, நான் இப்பொழுது அதைக் காண்கிறேன். நீங்கள் அதைப் பெற்றுக் கொண்டீர்களா-? பாருங்கள். அவன் நியாயத்தீர்ப்பினுள் வர முடியவில்லை, ஏனென்றால் அங்கு அவனுக்கும் நியாயத்தீர்ப்பிற்கும் இடையில் ஒரு பரிகாரம் இருந்தது. உலகத்தின் வெள்ளம் தான் நியாயத் தீர்ப்பாக இருந்தது. 92. கிறிஸ்துவுக்குள் இருக்கும் விசுவாசி அரணான பாதுகாப்புக்குள் இருக்கிறான். ஆமென். தன்னுடைய தகுதியின் மீதல்ல, ஆனால் அவனுடைய கீழ்ப்படிதலின் மேல், பேழைக்குள் நடந்து செல்லும் கீழ்ப்படிதல். நோவா செய்ய வேண்டியிருந்த ஒரே காரியம் என்னவென்றால், பேழைக்குள் பிரவேசிப்பது தான். அவன் கதவைக்கூட அடைக்க வேண்டியதாய் இருக்கவில்லை; தேவன் தாமே அதைச் செய்தார். உள்ளே நடந்து செல்லுங்கள்; விசுவாசி செய்ய வேண்டியது எல்லாமே, விசுவாசத்தினாலே கிறிஸ்துவுக்குள் நடந்து செல்வது தான். தேவன் அதைக் குறித்து மீதியானவற்றைப் பார்த்துக் கொள்கிறார். ‘என் வசனங்களைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு, அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குள், பேழைக்குள் என்றென்றும் பாதுகாப்பாக இருக்கிறான். ஆமென். அதற்கு விருப்பமானால், நியாயத்தீர்ப்பு அவளை முன்னும் பின்னும் அசைத்துக் குலுக்கலாம். 93. ஏன், பேழையானது சிலசமயங்களில், திகிலூட்டும் விதமாக (standing on the end), தலை கீழாகவும், மற்ற ஒவ்வொன்றுமாகவும் இருந்ததாக நான் கற்பனை செய்கிறேன். ஆனால் நோவா பாதுகாப்பாக இருந்தான். அந்த கீலானது அவனுக்கும் நியாயத்தீர்ப்புக்கும் இடையே நின்றது. 94. இன்று தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தமானது நமக்கும் எல்லா நியாயத்தீர்ப்பிற்கும் இடையே நிற்கிறது. ஆமென். ‘... ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல் அல்லது நியாயத்தீர்ப்பினுள் வராமல், மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்’ ஆமென். ஏன்-? ஏனென்றால் அவன் பேழைக்குள் இருக்கிறான். என்னவொரு பரிபூரண காட்சி. 95. மரங்கள் வெட்டி சாய்க்கப்படுகின்றன, அவர்கள் உலகத்தில் தொடங்கின விதமாக, முதலாவது வெட்டி வீழ்த்துகிறார்கள், அதாவது ஒவ்வொரு மனிதனும், உலகத்திற்குள் வரும் போது, பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, பொய் பேசுகிறவனாக உலகத்தில் வருகிறான், அவன் சபிக்கப்பட்டவனாய், அன்பற்றவனாய், தெய்வ பக்தியற்றவனாய், தேவனை விட்டுத் தூரமாய் இருந்து, அந்நியனாய், நம்பிக்கையற்றவனாய், கிறிஸ்து அற்றவனாய் இருந்து, மரித்து, ஒரு பாவியினுடைய கல்லறைக்குள் சென்று, நியாயத்தீர்ப்புக்கு ஆயத்தமாகிறான். 96. அதன் பிறகு, வார்த்தையானது, இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டையத்திலும் கருக்குள்ளதாய் வந்து, அந்த மரத்தை வெட்டிப் போட்டு, அதைச் செதுக்கி, கம்புகளைச் சுற்றி இருக்கும் எல்லா கூர்மையான பகுதிகளையும், எல்லா முட்களையும் வெட்டிப் போட்டு விடுகிறது. அதிலிருந்து மிகச்சிறந்த பாகமானது வெட்டி எடுக்கப்பட்டு, கட்டுபவராகிய (Builder), கிறிஸ்துவின் கரங்களில், ஆமென், எளிதில் வளையக்கூடிய ஒன்றாக ஆகிறது. 97. அதன்பிறகு அவருடைய ஜீவனானது இரத்தம் சிந்துதலின் மூலமாக, கல்வாரியில் வழிந்தோடியது. பாதுகாப்பின் பேழையில் இருக்கும் மனிதனை காப்பாற்றும்படியான ஒரு பரிகாரத்தை அவர் நிச்சயமாக செய்தாக வேண்டும். ஓ, என்னே, என்னவொரு காட்சி. அப்படியானால், அந்தக் கீலானது அதின் மேல் வைக்கப்பட வேண்டுமானால்... 98. நிச்சயமாக, அது தண்ணீரினால் முழுவதும் நனைந்து, ஊறி, உபயோகமற்றதாய் ஆகி விடும். நீங்கள் இதைக் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். ஒரு மனிதன், ‘நல்லது, நான் வார்த்தையை விசுவாசிக்கிறேன். நான் இதை, அதை ஏற்றுக்கொள்வேன்’ என்று கூறுகிறான். அந்த இரத்தம் இல்லாமல், நீங்கள் இந்த உலகத்திலேயே விடப்படுவீர்கள். நீங்கள் எவ்வளவு தான் பேழைக்குள் இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, எவ்வளவாக பேழையில் அல்லது நீங்கள் எந்த மரப்பலகையில் இருந்தாலும், அது காரியமில்லை, நீங்கள் கீல்பூசப்பட்டு, உறிஞ்சப்பட வேண்டும், பரிசுத்த ஆவியினால் முழுவதுமாக நனைந்து, உலகம் (உள்ளே வராமல்) தடுக்கப்பட வேண்டும். 99. அதன் பிறகு, நீங்கள் இதைக் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன், எவ்வளவு அழகாயுள்ளது. அதன் பிறகு... அதன் ஒழுங்கில் அங்கே வேறொரு மரம் வெட்டப்பட வேண்டியதாய் இருந்தது, ஒரு சக இனத்தான் வெட்டப்பட்டு, அதை விட்டு எல்லா பிசினும் பிரிந்து கீழே விழும் மட்டுமாக அடிக்கப்பட வேண்டியிருந்தது. அப்போதிருந்த இந்தப் பிசினானது வெட்டப்பட்ட வேறொன்தைக் காப்பாற்றும் பொருட்டு, அதன் மேல் ஊற்றப்பட்டது. ஆமென். மேலும் இன்றைக்கு... எவ்வளவு காலம் அது பாதுகாப்பாக இருந்தது-? ஏன், அந்தப் பாவம், ஆறாயிரம் வருடங்களுக்கு முன்பு... 100. அந்தப் பழைய காலத்து பேழை இன்னுமாக ஒரு மலையின் உச்சியில் இருப்பதை அவர்கள் காண்கிறார்கள். வேறு (எந்த) மரமும் அதை இன்று வரை தொடர்ந்து இருக்கச் செய்யாது. இருக்கவே செய்யாது. ஏன்-? அது மற்றொன்றின் மரணத்தின் மூலமாக கீல் பூசப்பட்டிருந்தது. கீலானது என்ன செய்யும் என்பதன் ஒரு ஞாபகார்த்தமாக, அந்தப் பேழையானது உள்ளும் புறம்பும் கீல்பூசப்பட்டதாய் இன்னும் நின்று கொண்டிருக்கிறது. 101. ஓ, கிறிஸ்து எவ்வாறு இருக்கிறார் என்பதற்கான என்னவொரு பரிபூரண காட்சி. கிறிஸ்துவுக்குள் விசுவாசியின் ஸ்தானம், கிறிஸ்துவுக்குள் ஒரு முறை வந்த பிறகு, வெளியே கீல் பூசப்பட்டிருந்தது... நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்... பேழை ஆயத்தமாகி விட்டது. நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம் என்னவென்றால், உள்ளே வந்து விசுவாசிப்பது தான். 102. கவனியுங்கள், நோவா உள்ளே வந்த போது, அது தான் அவன் செய்ய வேண்டியிருந்த ஒரே காரியமாக இருந்தது, உள்ளே பிரவேசித்தல். தேவன் கதவை அடைத்தார், நியாயத்தீர்ப்பு கடந்து செல்லும் வரையில் அவன் பாதுகாப்பாக இருந்தான். தேவனே கதவை அடைப்பதைச் செய்தார். தேவனே திறந்தார். அது தான் விசுவாசி இன்று கிறிஸ்துவில் இருப்பது. 103. கவனியுங்கள். இப்பொழுது துரிதமாக... சொல்லப்பட்டிருக்கும் அடுத்த பேழையானது மோசேயினுடையதாகும், நாம் அப்படியே சிறிது நேரம் அதற்குச் செல்லலாம். வேதம் அந்தச் சிறு கூடையை ஒரு பேழையென்று கூறுகிறது. அது அவனைப் பெற்றவளாகிய தாயாரால் அளிக்கப்பட்டது என்பதைக் கவனியுங்கள். ஆமென். 104. ஏதோவொரு வேதாகம கல்லூரியின் மூலமாக அல்ல, ஏதோவொரு இறையியல் அனுபவத்தின் மூலமாக அல்ல, ஆனால் விசுவாசிக்கு பிறப்பைக் கொடுக்கும் ஒருவர் மூலமாக, அவனுக்காக பேழையை ஆயத்தப்படுத்தி, நியாயத்தீர்ப்பின் வழியாக அவனைத் தாங்கிக் கொண்டு போகிறார். 105. எனவே அவள் அவர்கள் அங்கே கொண்டிருந்த ஒரு சிறு மக்காசோள தண்டு, சணல் நார் தண்டு போன்ற சிறு--சிறு தண்டுகளைக் கொண்டு அதைப் பின்னினாள். அவர்கள் இன்னும் அதை எகிப்தில் கொண்டிருக்கின்றனர். தாய்மார்கள் தாங்கள் நைல் நதியில் ஆழமற்ற தண்ணீரில் நடந்து செல்லும் போது, தங்களுடைய சிறு வயது குழந்தைகளை ஒரு சிறு கூடையில் வைத்து, நைல் நதியின் குறுக்கே அதைத் தள்ளிக் கொண்டு போவதை நீங்கள் இன்னும் காண முடியும். அதே விதமாகத் தான் அவனை ஒரு கூடையில் வைத்து நைல் நதியின் குறுக்காக அவனைத் தள்ளிச் சென்றனர். அவள் சென்று ஒரு சிறு பேழையை அவனுக்காக உண்டாக்கினாள். அது செய்யப்பட்ட அதே விதத்தில் தான். அவர்கள் அதைச் செய்து கொண்டிருந்த போது, அதை உள்ளும் புறம்பும் பின்னுகிறார்கள். நெய்கிறவர்களும் அதே வழியில் செய்கிறார்கள், அதை முன்னும் பின்னும் நெய்கிறார்கள். பிறகு அவள் சென்று, அதன் மேல் சகதியைப் பூசினாள் (slimed). சகதி (slime) என்பது மறுபடியும் ஒரு கீலாக உள்ளது. ‘கீல்’ அல்லது ‘பரிகாரம்’ என்று கூறாமலிருக்கிறதா என்று கவனியுங்கள், சகதி என்ற அதே வார்த்தை தான், சரியாக அதனூடாகவும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. பிறகு, நீங்கள் பாருங்கள், பின்னுகிறவர்கள் இந்தத் தண்டுகளைக் கொண்டு உள்ளும் புறம்பும் பின்னுகையில், அதில் சிறு இடைவெளிகள் உண்டாகும், எனவே அந்த இடைவெளிகளை இந்தக் கீலானது பற்றிப் பிடித்துக் கொள்ளும். 106. ஓ, என்னே. விசுவாசி எப்படியாக... இன்று நாமெல்லாரும் ஒருவர் ஒரு மெதோடிஸ்டாகவும், மற்றொருவர் ஒரு பாப்டிஸ்டாகவும், ஒருவர் ஒரு லூத்தரனாகவும், ஒருவர் ஒரு ஒருத்துவக் காரராகவும், ஒருவர் ஒரு திரித்துவக்காரராகவும் பிரிந்திருப்பது என்னவொரு அவமானம். என்னவொரு பரிதாபம். அவர்கள் அனைவரும் ஒன்றாக நெருக்கமாக பின்னப்பட்டு, பிறகு கீலானது அதன் மேல் ஊற்றப்பட்டு, பிறகு அதெல்லாம் ஒன்றாக ஒட்டப்பட்டு, ஒன்றாக உறுதியாக இணைக்கப்பட்டு, ஒரு பாதுகாப்பை உண்டாக்க வேண்டும். அற்புதமானது, அதன் மீது கீலானது ஊற்றப்படுகிறது. 107. பிறகு அந்தச் சிறு குழந்தையாகிய மோசே கூடையில் (basket) வைக்கப்பட்டு வெள்ளமாகிய நியாயத்தீர்ப்பிற்குள் தள்ளப்பட்டான். ‘தண்ணீர்’ எப்போதும் ‘பெரும் எண்ணிக்கையிலான திரளான ஜனக்கூட்டத்தை’ அர்த்தப்படுத்துகிறது. அங்கே வெளியே இருந்த அந்தச் சிறு குழந்தையின் முகத்தின் மேல் அநேகமாக ஒரு சிறு மூடி இருந்தது, அவன் வெளியே நைல் நதியில் அந்தப் பேழையில் இருந்தான். அவள் துரிதமாக இருந்தாள். அது அங்கே அதனூடாக, நைல் நதியைச் சுற்றிலும் இருந்த நாணல் செடிகள் வழியாகவும், ஈர நிலத்தில் வளரும் செடிகளினூடாகவும் (bulrushes), முதலைகளினூடாகவும் மற்ற ஒவ்வொன்றினூடாகவும் சென்று கொண்டிருந்தது. மழையும், புயலும், பனிப்புயல்களும், கடுங்காற்றும் அங்கே அதனூடாக வீசியடித்துக் கொண்டிருக்க, அந்தச் சிறு பேழை அதில் சவாரி செய்தது. ஏன்-? அந்தப் பேழையில் ஒரு ஆசாரியன் இருந்தான். ஆமென். அவன் ஒரு ஆசாரியனாக இருந்தான். அவன் நியாயப்பிரமாணத்தை அளித்த ஒருவனாயிருந்தான். அவன் ஒரு இராஜாவாக இருந்தான். 108. நோவாவும் அவ்விதமே இருந்தான். நோவாவும் கூட ஒரு தகப்பனாக இருந்தான். தகப்பனாகிய அவன் தாமே அந்தப் பேழையை உண்டுபண்ணி, தன்னுடைய பொருட்களோடு அந்தப் பேழையில் இருந்தான். 109. தம்முடைய சொந்த இரத்தத்தைக் கொண்டு பேழையை உண்டு பண்ணினவராகிய நம்முடைய பிதாவாகிய கிறிஸ்து பேழையினுள் விசுவாசியுடனே கூட இருந்து ஐக்கியப்படுகிறார். என்னே...! 110. எல்லா பிள்ளைகளும் எல்லா விலங்குகளும் நோவா பிரசங்கிப்பதைப் கேட்டுக் கொண்டு, நியாயத்தீர்ப்பு ஊற்றப்பட்ட போது, பேழையானது அந்த அலைகளில் சவாரி செய்தது, அது அனேக வித்தியாசமான இடங்களில் சோதனை செய்யப்பட்டது. நோவா, ‘பிள்ளைகளே, தொடர்ந்து பற்றிக் கொண்டிருங்கள். தேவன் இந்தப் பேழையை உண்டாக்கியிருக்கிறார். அவருடைய கட்டளைபடியே இது கட்டப்பட்டுள்ளது. பிசாசு அதற்கு விரோதமாக அனுப்பக் கூடிய ஒவ்வொன்றையும் அது தாங்கிக் கொள்ளும்’ என்றான். நோவா பேழையில் இருந்தவாறு பிரசங்கித்துக் கொண்டிருந்து, நியாயத்தீர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டான்... 111. அங்கே வெளியிலிருந்த குட்டி மோசே, இரவில் வானத்தில் ஒளி வீசின நட்சத்திரத்தை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான், காற்று வீசின போது, காற்று வேகமாக வீசுவதால் அவ்விடத்தில் சத்தம் ஏற்பட்ட போதும், அந்தப் பழைய நைல் நதியில் அது குலுங்கிய போதும், முதலைகள் அக்கூடையின் கீழாக போய்க் கொண்டிருந்த போதும், அல்லேலூயா! பாதுகாப்பாக காப்பாற்றப்பட்டான், அவனுக்கும் பிசாசு அனுப்ப முடிந்த எல்லா புயல்களுக்கும் பெரும் காற்றுக்கும் இடையே ஒரு பரிகாரம் நின்று கொண்டிருந்தது. எதுவும் அச்சிறு பேழையை கவிழ்த்துப் போடவில்லை. அவன் சரியாக அதனூடாக மிதந்து சென்றான். 112. மகத்தான பரிசுத்த ஆவியானவர் அதற்கு மேலாக நின்று கொண்டிருப்பதை என்னால் காண முடிகிறது. தேவ தூதர்கள் தங்களுடைய உருவின பட்டயங்களுடன் அதற்கு அருகில் இருப்பதை என்னால் காண முடிகிறது. இல்லை, ஐயா, அதை எதுவும் தொடப் போவதில்லை. 113. பிசாசு அங்கே மேலேயிருக்கும் அப்பேழையை மூழ்கடிக்க முயற்சிப்பதை என்னால் காண முடிகிறது, நோவா, ‘இயேசுவே, என்னை சிலுவையண்டை வைத்திரும்’ என்று பாடுவதை என்னால் காண முடிகிறது, அல்லது அது என்னவாக இருந்ததோ அது. நரகத்திலுள்ள எல்லா பிசாசுகளும் அதை மூழ்கடிக்க முடியவில்லை, ஏனென்றால் அது தேவனுடைய கட்டளையின்படி கட்டப்பட்டதாகும். அங்கே நியாயத்தீர்ப்புக்கும் இரக்கத்திற்கும் இடையே நின்று கொண்டிருந்த ஒரு பரிகாரம் இருந்தது. 114. அது இன்றுள்ள ஒவ்வொரு விசுவாசிக்கும், அது காண்பதற்கு எவ்வளவு கடினமாக காணப்பட்டாலும் அது ஒரு பொருட்டல்ல...-? வாழ்க்கை எவ்வளவு கடினமாகவும் தோன்றலாம். நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கும் காலம் வரை எந்த நிகழ்காரியங்களோ, எந்த வருங்காரியங்களோ, கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பை விட்டு நம்மைப் பிரிக்கும்படி உங்கள் ஆத்துமாவை தொட முடியாது. ஆமென். பிசாசு நரகத்தின் ஒவ்வொரு புயலையும் திருப்பி உங்கள் மேல் கட்டவிழ்த்து விடலாம், ஆனால் உங்களுக்கிடையே நின்று கொண்டிருக்கிற ஒரு பரிகாரத்தை தேவன் பெற்றுள்ளார். நீங்கள் ஒவ்வொரு அலையிலும் மிதந்து செல்வீர்கள். நீங்கள் முதலைகள் இருக்கும் ஒவ்வொரு கடல் அடிப்பரப்பினூடாகவும் செல்லுவீர்கள். அவன் எங்கே கரை இறங்கினான்-? நேராக சரியாக முழு எகிப்திற்கும் இராஜாவாய் இருந்தவனின் எல்லைக் கோட்டில் தான். அல்லேலூயா. 115. இந்நாட்களில் ஒன்றில், இந்தப் பழைய பேழையானது புயல் வீசும் யோர்தானின் அக்கரையில் கரையிறங்கும் போது, நாம் தேவனுக்கு ஆசாரியர்களும் இராஜாக்களுமாக நடப்போம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் பரிகாரத்தின் கீழாக நின்று கொண்டிருப்போம், விரும்புகிற யாராயிருந்தாலும் அவர்களுக்கு அது இலவசமாக கொடுக்கப்படுகிறது, பரிகாரம், இரக்கம். 116. பழைய ஏற்பாட்டில், அவர், ‘இப்பொழுது, நீ ஒரு- -ஒரு பேழையை உண்டுபண்ணுவாயாக’ என்றார். அவர் ‘வேலமரம்’ என்ற மரத்தையே குறிப்பிட்டார். அல்லது இந்த மரத்தைக் கொண்டு உங்களால் அதை உண்டாக்க முடியும். அது வேதாகமத்தில் ‘சீத்திம் மரம்’ என்று அழைக்கப்படுகிறது, ஆனால் அது உண்மையில் ‘வேல மரம்’ என்று அழைக்கப்பட்டது. நீங்கள் அதே காரியத்தை, பேழையை உண்டு பண்ண முடியும். ‘நீ அதை உண்டு பண்ணி, அதை பொன் தகட்டால் மூடுவாயாக’ என்றார். அந்தப் பேழையை கவனித்து, அது கிறிஸ்துவுக்கு மாதிரியாக இருக்கிறதா என்று பாருங்கள். கவனியுங்கள், அது ஒவ்வொரு தடவையும் மாதிரியாயிருந்தது. நோவா கிறிஸ்துவுக்கு ஒரு மாதிரியாக இருந்தான், ஒரு வழியை உண்டு பண்ணினான், அவ்வாறே மோசேயும் இருந்தான். 117. இப்பொழுது, அந்த உடன்படிக்கைப் பெட்டியைக் கவனியுங்கள். அவர், ‘நீ அதை வேல மரத்தினால் (acacia wood) உண்டாக்கி, அதை பொன் தகட்டால் மூடுவாயாக’ என்றார். வேத வாக்கியங்களை அறிந்திருக்கும் எவரும், பொன்னானது தெய்வீகத் தன்மையைக் குறித்துப் பேசுகிறது என்றும், மரமானது மனுஷீக தன்மையைக் குறித்துப் பேசுகிறது என்பதையும் அறிவார்கள். பாருங்கள், அவர், ‘நீ அதை மூடுவாயாக, பொன் தகட்டால் அம்மரத்தை மூடுவாயாக’ என்றார். அதாவது மரத்தின் மேல் தெய்வீகத் தன்மை: கிறிஸ்து சபையின் மேல் உள்ளும் புறம்பும் தெய்வீகத்தால் மூடியிருந்தல். 118. நீங்கள் அதன் உச்சியில் ஒரு மூடியைக் கொண்டிருக்க வேண்டும், அது ஒரு இரக்கத்தின் சிங்காசனமாக இருக்கும், எல்லா நியாயப் பிரமாணங்களும் அதில் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் நீங்கள்...-?... முன்பு நீங்கள் அதில் இரத்தத்தைத் தெளிக்கிறீர்கள். நியாயப்பிரமாணம் நியாயத்தீர்ப்பைக் குறித்துப் பேசுகிறது. ஆனால் நியாயப்பிரமாணத்திற்கும் சபையாருக்கும் இடையில், அதனுடைய ஸ்தானத்தில் நின்று கொண்டிருந்த தெய்வீகத் தன்மைக்கான ஏதோவொன்று இருந்தது. கிறிஸ்துவுக்கு மாதிரி. 119. நரகத்திலுள்ள நியாயத் தீர்ப்பான தேவ கோபத்திற்கு இடையே, அதற்கும் விசுவாசிக்கும் இடையில் தெய்வீகத் தன்மை தாமே நின்று கொண்டிருக்கிறது, கிறிஸ்து நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை இரட்சிக்கும்படியும் நம்முடைய நோய்களிலிருந்து நம்மை சுகமாக்கும்படியும் உண்டு பண்ணின ஒரு பரிகாரத்துடன் அந்த வழியில் நின்று கொண்டு இருக்கிறார். தெய்வீகத் தன்மையானது (Deity) நியாயத்தீர்ப்புக்கு இடையே அவ்விதமாக நின்று கொண்டு இருக்கிறது. 120. நியாயப்பிரமாணம் ஒரு நியாயாதிபதியாக (judge) இருந்தது. நியாயப்பிரமாணம் நியாயந்தீர்த்தது, ஆனால் அந்தப் பரிகாரமானது அறிக்கையிடும் விசுவாசிக்கும் நியாயத் தீர்ப்புக்கும் இடையே நின்றது. பேழையில் நியாயத்தீர்ப்பு வைக்கப்பட்டு, அது புறப்பட்டுச் செல்ல ஆயத்தமாயிருந்தது. ஆனால் அது அவ்வாறு செய்த போது, அதனால் முடியவில்லை, அதற்கும் விசுவாசிக்கும் இடையே ஒரு பரிகாரம் நின்று கொண்டிருந்தது. விசுவாசி வந்து நிழலாயும் மாதிரியாயும் உள்ள கிறிஸ்துவை ஏற்றுக் கொள்கிறான், சிந்தப்பட்ட இரத்தமானது இரக்கத்தின் சிங்காசனத்தின் மேல் தெளிக்கப்படுகிறது, அப்பொழுது அவன் இரக்கத்தைக் கொண்டிருக்கிறான், அவன் களிகூர்ந்தவாறே வெளியே நடக்க முடிந்தது, ஏனென்றால் அவன் நியாயத்தீர்ப்பிலிருந்து விடுதலையாக்கப்பட்டான். 121. ‘ஆனபடியினால் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாய் இருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை.’ ஒரு மனிதன், தான் உலகத்தின் காரியங்களுக்கு மரித்து, கிறிஸ்து இயேசுவுக்குள் வந்து, பரிசுத்த ஆவியானவரின் இசைவில் நடந்து, இந்தப் பாவமான உலகத்தின் வழிகளில் இல்லை என்பதை அறியும் போது, அவனுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை. அவன் நரகத்தின் முகத்தையும் நியாயத் தீர்ப்பையும் நோக்கிப் பார்த்து களிகூர முடியும், ஏனென்றால் அங்கே கிறிஸ்துவின் இரத்தமானது பரிகாரத்தை உண்டு பண்ணி, அவனுக்கும் நியாயத்தீர்ப்புக்கும் இடையே நின்று கொண்டு இருக்கிறது. ஆமென். அங்கே தான் உங்கள் காரியம் இருக்கிறது. 122. விசுவாசி ஒரு விசை உள்ளே வந்து, மூடியானது அடைக்கப்பட்ட போது, அது எல்லா நேரத்திற்கும் அதைத் தீர்த்து வைக்கிறது. ஆமென். தெய்வீகமாகிய தங்கத்தினால் அது மூடப்பட்டது, அதற்கு கீழேயும் அதைச் சுற்றிலும் முழுவதுமாக தெய்வீகத்தால் மூடப்பட்டது. கிறிஸ்துவுக்குள் வருகிற ஒவ்வொரு மனிதனும் பரிசுத்தாவியால் மூடப்பட்டு, தேவனுடைய குமாரர்களும் குமாரத்திகளுமாக ஆகிறார்கள். 123. ......மேலும் அப்படியே தங்கத்தை அடிக்கின்றனர். அவர்கள் அதை சூடாக்கி அடித்து தகடாக்குகின்றனர். தங்கத்தை அடிக்கிறவன் அதைத் தகடாக அடிக்கின்றான். அவன் அதை ஒரு சுத்தியால் தகடாக அடிக்க வேண்டியிருந்தது. அவனுடைய பிரதிபலிப்பு அதில் காணப்படுவது வரையில் அவர்கள் தங்கத்தை அடிக்கின்றனர். பிறகு அதை சூடாக்கி, அதை பேழையின் மேல் ஊற்றுக்கின்றனர், அது மரத்தினுள் உறிஞ்சப்படும். ஓ, என்னே. 124. பரிசுத்தாவி - பரிசுத்தாவியும் அக்கினியும் வல்லமையோடு, கிறிஸ்துவின் இரத்தத்தின் வழியாக, விசுவாசியின் மேல் ஊற்றப்படும் போது, அது அவனுக்காக ஒரு பரிகாரத்தை அங்கே உண்டு பண்ணுகிறது. அவன் எல்லா தெய்வீக நியாயத் தீர்ப்பில் இருந்தும் பாதுகாக்கப்படுகிறான். ‘அதில் வியாதியும் அடங்கியுள்ளதா-?’ ஆம், ஐயா. முற்றிலுமாக வியாதியும் அதில் அடங்கி உள்ளது. 125. அது உங்களை இடித்து தள்ளாது என்றோ, அது உங்களை கிண்டல் செய்யாது என்றோ, அது உங்கள் மேல் வராது என்றோ, அது இதைச் செய்யாது என்றோ அது கூறவில்லை. ‘ஆனால் நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும்.’ பேழையானது அநேக தடவைகள் இந்த விதமாகவும், அந்த விதமாகவும் ஆடி அசைந்திருக்கும், ‘ஆனாலும் கர்த்தர் அவை எல்லாவற்றினின்றும் அவனை விடுவிக்கிறார்.’ அந்தப் பழைய பேழையானது மேலும் கீழும் எழும்பிக் குதிக்கும் அநேக காரியத்தைக் கொண்டிருந்தது. பல மேடுபள்ளங்களையும், அநேக புயல்களின் வழியாகவும் அவள் பிரயாணம் செய்தாள், ஆனால் அவள் சரியாக அதே விதமாக அரராத் மலையின் மேல் கரை இறங்கினாள். 126. நான் கூறினபடி, அநேக முதலைகள் அச்சிறு பேழையைக் கடந்து சென்றன, அநேக கடுங்காற்றுகள் அடித்துக் கொண்டிருந்த அந்த இரவினூடாக அவள் மிதந்து சென்றாள், அநேக இருண்ட புயல்களினூடாக அவள் (எந்தத் தடையும் இல்லாமல்) மிதந்து சென்றாள், ஆனால் அது பத்திரமாக அந்த நாணல் புதரில் (bulrushes) கரை இறங்கியது, அங்கே தான் அத்தேசத்தின் சிங்காசனத்தை அடையக் கூடியதான நோக்கம் கொண்டிருந்தது: கீழான நிலையிலிருந்து உயர்ந்த நிலைக்கு. ஆமென். 127. இழிவான தாழ்ந்த நிலையிலுள்ள, மிகப் பரிதாபகரமான, எல்லா பூச்சிகளிலும் தாழ்வான நிலையிலும், எல்லா சிருஷ்டிகளிலும் தாழ்ந்த நிலையிலும், ஒழுக்கத்தில் கறைப்பட்டு, ஆவிக்குரிய பிரகாரமாக மரித்திருந்த நாம், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் பேழையினால், தேவனுடைய குமாரர்களும் குமாரத்திகளுமாய், இராஜாக்களும் ஆசாரியர் களுமாய் அந்த ஸ்தானத்திற்கு உயர்த்தப்பட முடிகிறது. என்னவொரு காட்சி. நாம் எதைக் கவனத்தில் கொண்டு இருக்கிறோம்-? தேவன் மனிதனோடு செய்து கொண்டு உள்ள அப்படிப்பட்ட ஒரு திட்டத்தை மனிதனால் எவ்வாறு புறக்கணிக்க முடிகிறது-? 128. அங்கே, வேறொரு காரியத்தை நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். பெட்டியானது அதன் ஸ்தானத்திற்குள் சென்ற போது, அவர், ‘நீ அதன் உச்சியில் பொன்னினாலான ஒரு திரணையை (crown of gold) வைக்க வேண்டும்’ என்றார். வேறு வார்த்தைகளில் கூறினால், பேழையானது அதன் மேலும், அதைச் சுற்றிலும், அது எல்லாவற்றிலும் கீல் பூசப்பட்ட போது (pitched), நியாயப்பிரமாணமானது உள்ளே இருந்தது... பிறகு வேறொரு காரியத்தைக் கவனியுங்கள், அப்பம், கௌஷர் அல்லது முதலில் விழுந்த மன்னா, அந்த மன்னாவை கலசத்தில் எடுத்து பெட்டியினுள் வைக்கப்பட்டது. 129. மேலும், சகோதரனே, தேவன் நல்லவர் என்று காணும்படி நீங்கள் அவரை ஒரு போதும் ருசித்து இராதிருந்தால், பெட்டியினுள் மன்னா வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு ஒருமுறை வாருங்கள், வெளியிலுள்ள ஏதோவொரு பழைய, மாம்சீகமான, சுயாதீன - மதக்கோட்பாடு அல்லது வேறு ஏதோ ஓன்றிடமல்ல, ஆனால் கிறிஸ்துவின் உள்ளே வாருங்கள். வாசலினுள்ளே வாருங்கள், தேவன் உங்களுக்குப் பின்னே கதவை அடைப்பார், நியாயத் தீர்ப்புகளிலிருந்து காக்கப்படுவீர்கள். 130. கவனியுங்கள். அவன் உள்ளே நடந்து செல்கையில். அவன் இந்தப் பெட்டியை எடுத்தான்... மேலும் ஆரோனுடைய கோலானது அங்கே அதற்குள் வைக்கப்பட்டு துளிர்த்தது; மரித்துப் போயிருந்த ஒரு பழைய கோல், ஒரு கம்பு (staff), ஒரு குச்சியானது, அங்கே இருந்த மரத் துண்டைக் காட்டிலும் அது மேலானதாக இல்லை, அதிலிருந்து எல்லா ஜீவனும் போய் விட்டு இருந்தது. அது எவ்வளவு முடியுமோ அவ்வளவு உலர்ந்து போயிருந்தது. ஆனால் அது ஒருவிசை அந்த பரிசுத்த ஸ்தலத்திற்குள் வைக்கப்பட்ட போது, அது மீண்டும் ஜீவித்தது. 131. ஒவ்வொரு பாவியும், அவன் எவ்வளவு சலிப்பாயுள்ளான் என்றோ, எவ்வளவு கறுப்பாய் உள்ளான் என்றோ, உங்களுடைய ஜீவியம் என்னவாக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை; கிறிஸ்துவின் பிரசன்னத்தில் நீங்கள் மீண்டும் ஜீவிப்பீர்கள். நீங்கள் செழிப்படைந்து, ஆவியானவரால் ஊக்குவிக்கப்பட்டு, இளமை பருவத்திற்கு கொண்டு செல்லப்படுவீர்கள். நீங்கள் எவ்வளவு வியாதியாய் இருந்தாலும் ஒரு பொருட்டல்ல, அவ்வாறிருந்தாலும் நீங்கள் பரிகாரத்தின் பிரசன்னத்தில் ஜீவிப்பீர்கள். என்னவொரு அற்புதம். நாம் என்னவொரு காரியத்தை ஆராய்ந்து கொண்டு இருக்கிறோம். என்னவொரு வேதவாக்கியம். எப்படிப்பட்ட ஒரு தேவன். என்ன -- என்ன பரிபூரணம்... என்னவொரு நிச்சயமான அஸ்திபாரம். மற்ற எல்லா நிலங்களும் அமிழ்ந்து போகும் மணலே. மற்ற எல்லா நிலங்களும் அமிழ்ந்து போகும் மணல் தான். 132. கவனியுங்கள், அதன் மேல் ஒரு கிரீடத்தை வைத்தல். ஏன்-? அது இராஜாவாக இருந்தது. ஒரு பெட்டியின் உச்சியில் பொற்கிரீடம் வைக்கப்படுவதன் அர்த்தம் என்ன-? இங்கே அதன் மேல் பொன்னானது மூடப்பட்டு, மனுஷீகத்தன்மையானது பொன்னினால் மூடப்பட்டிருந்தது தான் அதன் அர்த்தம். இரத்தமானது அதன் உச்சியில் தெளிக்கப்பட்டு, ஒரு கிரீடமானது அதன்மேல் வைக்கப்பட்டது. 133. கிறிஸ்துவுக்கும், அவருடைய தெய்வீகத்திற்கும், அவருடைய அன்புக்கும் என்னவொரு பரிபூரண மாதிரி. அவர் புறப்பட்டு உலகத்துக்குள் வந்து தம்மைத் தாமே மனித இனத்தின் மேல், அவருடைய விசுவாசிகளாகிய அவருடைய சபையின் மேல் கிடத்தினார். அதன் மேல், அவர் தம்முடைய சொந்த இரத்தத்தைத் தெளித்து, ‘விருப்பமுள்ளவன் எவனோ’ அவனை இரட்சித்தார். பொன்னினால் இரண்டு தூதர்களை அடிப்பித்து, அவைகளின் செட்டைகள் ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளுமாய் கிருபாசனத்தை நோக்குகிறவைகளுமாய் இருப்பதாக, அங்கு தான் ஒவ்வொரு விசுவாசியும் வந்து, தன்னுடைய பாவங்களை அறிக்கையிட்டு, தன்னுடைய பாவத்திற்காக ஒப்புரவாகுதலைப் பெறுகிறான். 134. அங்கே தான் அவர் இருக்கிறார். இப்பொழுது, அவரை நோக்கிப் பாருங்கள். பொற்கிரீடம் கிறிஸ்துவை பிரதிநிதித்துவப்படுத்துகிறதா-? ஆம். கிறிஸ்து இங்கே பூமியின் மேல் இருந்த போது, அவர் இரத்தம் சிந்தும்பொருட்டு முட்கிரீடம் சூட்டப்பட்டார். அது சரியே. ஆனால் அந்த சிந்தப்பட்ட இரத்தத்தின் வழியாக வரும் ஒவ்வொரு விசுவாசியும், அந்த முட்கிரீடத்தை எடுத்து விட்டு, துதிகள் கனம் ஆகியவைகளின் மகிமையினால் அவருக்கு கிரீடம் சூட்டுகிறார்கள். அவருடைய பிரசன்னத்திற்குள் அடியெடுத்து வைத்து, இங்கே அவருடைய நெற்றியில் முட்கள் அழுத்தப்பட்டு அதிலிருந்து வந்த இரத்தத்தை ஏற்றுக் கொள்கிற ஒவ்வொரு விசுவாசியும் அவரை மகிமையோடும் துதிகளோடும் மாட்சிமையோடும், இராஜாதி இராஜாவாகவும், சுகம் அளிப்பவராகவும், அல்பாவாகவும், ஒமேகாவாகவும், ஆதியும் அந்தமுமாகவும், ஆலோசனை அருளுபவராகவும், சமாதான பிரபுவாகவும், வல்லமையுள்ள தேவனாகவும், நித்திய பிதாவாகவும் முடிசூட்டுகிறார்கள். 135. நோவா தன்னுடைய பேழையில் பிதாவாக இருந்தான். மோசே தன்னுடைய பேழையில் பிதாவாக இருந்தான். கிறிஸ்து தம் உடைமைகளாகிய, சபையாகவும் விசுவாசியாகவும் ஜனங்களுமாகிய நீங்கள் பாதுகாப்பாக காப்பாற்றப்படும் பொருட்டு உங்களுடன் தம்முடைய பேழையில் கிறிஸ்து பிதாவாக இருக்கிறார். 136. நீங்கள் மீண்டும் கவனிக்கும்படி நான் விரும்புகிறேன், அந்தப் பேழையை அணுக ஒரு வழியினூடாக வர (வேண்டும்)... நீங்கள் கவனியுங்கள், அந்தப் பேழையினுள் வரும் ஒவ்வொரு மனிதனும் முதலில் வெளிப்பிரகாரம் வழியாக வர வேண்டியிருந்து; அடுத்ததாக அவன் வர வேண்டியது உள்திரை வழியாகத் தான்; பிறகு மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் வர வேண்டும். 137. அது கிறிஸ்துவை தீர்க்கதரிசியாகவும், ஆசாரியராகவும் இராஜாவாகவும் முடிசூட்டுவதாக இருந்தது. முதலாவது வருகிற காரியம் என்னவென்றால், அவர் முதலாவது அதனூடாக வரும் போது, அவர் இங்கே எதைக் குறித்து பேசியிருக்கிறார் என்பதைக் காணுங்கள், அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார். 138. கிறிஸ்துவிடம் வரும் ஒரு மனிதன் முதலில் சிலுவையிடம் வந்தாக வேண்டும். சிலுவை தான் அவருடைய ஆசாரியத்துவமாக இருந்தது. அவர் மரணத்தில் பிரதிநிதித்துவப்படுத்தின இடத்தில் அங்கே சிலுவை இருந்தது. அந்தச் சிலுவை அங்கு தான் இருக்கிறது, அங்கே, ‘தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை கொடுத்து, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.’ 139. ஒரு மனிதனிடம் கிறிஸ்து பிரசங்கம் பண்ணுவதை அவன் கேட்டாலொழிய, சரியான சிந்தையிலுள்ள எந்த மனிதனும், அவருக்கு முன்பாகக் கொண்டு வரப்பட்டு, சிலுவைக்கு முன்பாக ஒரு போதும் வர முடியாது. கிறிஸ்து தீர்க்கதரிசியாகவும் பிரசங்கியாராகவும் இருக்கிறார். 140. பிறகு அவர் செய்கிற அடுத்த காரியமானது, அவர் பரிகாரத்திற்காக அதனூடாக போகிறார். அவர் பரிந்து பேசும்படிக்கு ஒரு ஆசாரியராக அந்த திரையினூடாக போகிறார், பரிந்து பேசுதல், ‘தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்து பரிந்து பேசுதலை செய்து கொண்டிருக்கிறார், விசுவாசிக்காக பரிந்து பேசுதலை பேசிக் கொண்டிருக்கிறார்.’ விசுவாசி அவருடைய பிரசன்னத்திற்குள் வருகிறான், அவன் சிலுவையிடம் வரும் போது, பிறகு அவன் விசுவாசிப்பதைப் பற்றிய அறிக்கையின் பேரில் கிறிஸ்து அவனுக்காக பரிந்து பேசுதலைச் செய்கிறார். 141. அவன் இப்பொழுது கிறிஸ்துவிடம் வருகிறான். அவன், ‘ஓ கிறிஸ்துவே, நீர் சிலுவையின் வழியாக உம்முடைய வார்த்தையை எனக்குப் பிரசங்கித்தீர் என்பதை நான் அறிவேன். நான் உம்மை விசுவாசிக்கிறேன். நீர் என்னிடம் இரக்கமாயிருப்பீரா-?’ என்று கூறுகிறான். 142. பரிந்து பேசுபவராகிய கிறிஸ்து பரிந்து பேசுகிறார். பிறகு அவன் சரியாக பேழைக்குள் போகிறான், அங்கே நியாயத் தீர்ப்பிற்குள், அவனுடைய நியாயத்தீர்ப்புகள் எல்லாவற்றையும் சுமந்து செல்கிற அதற்குள் போகிறான். எல்லா பாவமும், அவமானமும் அவனை விட்டு அகற்றப்பட்டு, தேவனோடு ஒப்புரவாகிறான். அந்த இரத்தத்தினாலாகிய பரிகாரத்தின் வழியாக, அவனைத் திரும்பவும் தேவனோடு ஐக்கியத்திற்குள் கொண்டு வந்து அவனைப் பேழைக்குள் என்றென்றுமாக பாதுகாப்பாக வைக்கிறது. 143. எதைக் குறித்தும் கவலைப்பட வேண்டியதில்லை. எந்தத் தீங்கும் செய்ய முடியாது. நீங்கள் உங்களால் எவ்வளவு பாதுகாப்பாக இருக்க முடியுமோ அவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறீர்கள். புயல்கள் வரலாம்... ஓ, ஒவ்வொன்றும் சம்பவிக்கலாம், வியாதி தாக்கலாம். சாத்தான் அனுப்ப விரும்புகிற எதுவும் சம்பவிக்கலாம். தேவன் அது ஒவ்வொன்றினூடாகவும் சரியாக உங்களை அசைந்தாடியபடி கொண்டு செல்வார். அதை விட்டு வெளியே குதித்து விடும்படி சென்று விட வேண்டாம். கிறிஸ்துவில் சரியாக தரித்திருங்கள். ‘தேவனாகிய கர்த்தாவே, நீர், ‘இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ள முடியாது’ என்று கூறியுள்ளீர். கர்த்தராகிய இயேசுவே, நான் உம்மை விசுவாசிக்கிறேன். நான் இப்பொழுது ஒரு இளைப்பாறும் துறைமுகத்தில் என் ஆத்துமாவை நங்கூரமிடுகிறேன்’ என்று கூறுங்கள். ஓ, என்னே. 144. நம்முடைய இரட்சிப்பின் பிரதான தளபதியாகிய (Chief Captain) கிறிஸ்து மகத்தான ஜெய வீரராக அங்கே நின்று கொண்டிருக்கிறார். அவர் திரையை இரண்டாக கிழித்து, பிரிவினையாகிய எல்லா நடுச்சுவர்களையும் தகர்த்து, ‘விருப்பமுள்ள எவரையும்’ வந்து தம்முடைய ஜீவனில் பங்கு கொள்ளும்படி அழைத்து, தம்முடைய தெய்வீக ஆசீர்வாதங் களினால் மூடிக் கொண்டார், அங்கே எந்த நியாயத்தீர்ப்பும் உங்களைத் தாக்காது. நியாயத் தீர்ப்பு தாக்கினால், அது உங்களைச் சேதப்படுத்த முடியாது. நீங்கள் சிறிது காலமாக வியாதியாய் இருக்கலாம், நீங்கள் ஏதோ ஒன்றினூடாக கொஞ்ச காலம் போக வேண்டி இருக்கலாம்; ஆனால் கிறிஸ்து முடிவில் இருக்கிறார் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். இந்தப் பேழையானது அவ்விதமாக ஒரு சிறு நீர்ச் சுழலில் சிக்கி, அங்கே எதுவும் இருக்காது என்றோ... அமைதியாக இருக்கும் என்றோ, அது எவ்வளவு கூடுமோ அவ்வளவு அமைதியாக இருக்கும் என்றோ அவர் ஒரு போதும் கூறவில்லை. இல்லை ஐயா, அவர் ஒரு போதும் சொகுசான மலர்படுக்கையைக் கொண்டிருக்கவில்லை. அவர் காரியங்கள் எளிதாக இருக்கும் என்று வாக்குப் பண்ணவே இல்லை, ஆனால் நீங்கள் அச்சமயத்தில் மூழ்காமல் இருக்கும்படியான கிருபையை வாக்குப் பண்ணி உள்ளார். கவிஞன் இவ்வாறு கூறினான் என்று நினைக்கிறேன்: பரிசைப் பெற்றிட மற்றவர் கடும்போரிட்டு இரத்தக் கடல்களின் வழியாக அக்கரை சேர்ந்திருக்கும் போது, ஓர் இலகுவான பூப்படுக்கையின் மேல் நான் பரலோக வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டுமா-? இல்லை, நான் அரசாள வேண்டுமானால், நான் போரிட வேண்டும். கர்த்தாவே, என் தைரியத்தை அதிகரியும். ஆம், ஐயா. கடினமான சோதனைகள் வரும் போது, அதைக் கவனிக்காதீர்கள், அப்படியே சரியாக பேழைக்குள்ளே தரித்திருந்து இவ்வாறு கூறுங்கள்: தேவனே, நான் என்றென்றைக்குமாய் பத்திரமாய் இருக்கிறேன். இனி கடூரமான சமுத்திரங்களில் பிரயாணம் செய்யாதபடிக்கு என்னுடைய ஆத்துமாவை நான் இளைப்பாறுதலின் புகலிடத்தில் நங்கூரமிட்டிருக்கிறேன். பெருங்கொந்தளிப்பான புயலின் ஆழத்தில் சூறாவளிக்காற்று வாரிக்கொள்ளலாம், ஆனால் இயேசுவில் நான் என்றென்றைக்குமாய் பத்திரமாய் இருக்கிறேன். 145. வியாதி வரலாம், உபத்திரவங்கள் வரலாம், ஏமாற்றங்கள் வரலாம் அல்லது ஆழ்ந்த மனக்கவலைகளோ மற்றும் ஒவ்வொன்றும் வரலாம், எதுவும் செய்வதில்லை. நாம் அசைக்க முடியாத ஒரு இராஜ்யத்தைப் பெற்றிருக்கிறோம். நீங்கள் பின்வாங்கி விடுவீர்கள் என்றோ, அதைப் போன்றவைகளைச் செய்வீர்கள் என்றோ கூறப்படவில்லை, ஆனால் தேவன் இந்நாட்களில் ஒன்றில் நீங்கள் தமது இராஜ்யத்தில் எவ்வளவு பாதுகாப்பாக இருக்க முடியுமோ அவ்வளவு பாதுகாப்பாக உங்களை கரை சேர்ப்பார். நீங்கள் சரியாக அவருடைய பேழையில் தங்கியிருங்கள். நாம் சற்று நேரம் நம்முடைய தலைகளைத் தாழ்த்தியிருக்கையில், கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக. 146. எங்களுடைய பரலோகப் பிதாவே, இன்று நாங்கள் அங்கேயுள்ள அவருடைய மகத்துவத்திற்குள் நோக்கிப் பார்க்கையில், அங்கே முற்காலத்து நோவாவோடிருக்கிற அவரை நாங்கள் காண்கிறோம். அந்த அலைகளில் யார் மிதந்து சென்று கொண்டிருந்தது-? கொப்பேர் மரத்தினால் செய்யப்பட்ட அந்தச் சிறு பழைய பேழையில் இருந்தது யார்-? எங்களால் மேற்கொள்ள முடியாதிருக்கிற மிகப்பெரிய கனமான அந்த யுத்த கப்பல் இப்பொழுது எங்கே. முழு உலகமும் அதிர்ந்து போய், ஆயிரமாயிரக் கணக்கான மைல்கள் அதோ அங்கே உள்ள அதனுடைய சுற்றுப் பாதையை விட்டு வெளியே தூக்கி எறியப்பட்டு, அங்கே வெளியிலிருக்கும் நீர்ச்சுழல் போன்று சுழன்று சுழன்று சென்றது, அலைகள் ஆகாயத்தில் மைல் கணக்கான உயரத்தில் எழும்பினது. முழு உலகமும் சூழ்ந்து கொள்ளப் பட்டது, இந்தப் பெரிய பழமையான மலைகள் தொடர்ந்து பெய்த பலத்த மழையினால் தரை மட்டத்திற்கு அழிக்கப்பட்டு, நடுஇரவின் அந்தகாரத்தில் சுழன்று கொண்டிருந்தது: நியாயத் தீர்ப்பு, மரித்த சரீரங்கள் அங்குமிங்குமாக மிதந்து கொண்டு இருந்தன (flopping and floating). கொப்பேர் மரத்தினால் செய்யப்பட்டு, உள்ளும் புறம்பும் கீல்பூசப்பட்ட ஒரு சிறு பழைய படகு; உம்முடைய அன்புக்குரிய விசுவாசிகளோ அந்த பேழையினுள்ளே எவ்வளவு பாதுகாப்பாக இருக்க முடியுமோ அவ்வளவு பாதுகாப்பாக இருந்தனர். அவர்கள் கவலைப்படவே இல்லை. செய்ய வேண்டுமென்று நீர் என்ன கூறினீரோ அதை அப்படியே அவர்கள் செய்திருந்தனர். அவர்கள் உம்முடைய அறிவுறுத்தல்களைப் பின்பற்றினார்கள். 147. நீர் கற்பித்தவைகளைப் பின்பற்றுகிறவன் குற்றவாளியாக தீர்க்கப்படவோ அல்லது தோற்றுப் போகவோ மாட்டான். இறுதியாக, நீர் அந்தப் புயலை நிறுத்தினீர், ஜீவியத்தின் புயல்கள் ஓய்ந்து போய், அதன் பிறகு நாங்கள் ஒரு புதிய உலகத்தில் பாதுகாப்பாக கரை இறங்குகிறோம். அன்புள்ள பரலோகப் பிதாவே, இன்று ஜீவிய கடலில் புயலினால் தூக்கி எறியப்பட்டு, மருத்துவ விஞ்ஞானம் மகத்தானதாய் இருந்து, சபைகள் அவ்வளவு மகத்தான பெரிய காரியங்களைச் செய்து கொண்டிருக்கும் இந்த நாட்களில், அது எப்படி நடந்தது என்றே எங்களுக்குப் புரியவில்லை. ஆனால் நாங்கள் இயேசுவில் நங்கூரம் இடப்பட்டிருக்கிறோம். புயல்கள் வரலாம், தொடர்ந்து உபத்திரவங்கள் எழும்பலாம், ஆனால் நாங்கள் அந்தப் போதனைகளைப் பின்பற்றினோம். அதனூடாக நீர் எங்களைக் காண்பீர். பரலோகப் பிதாவே, இந்த ஆசீர்வாதங்களை ஒவ்வொருவருக்கும் அருளும். இக்காலை வேளையில், எங்கள் வாசலில் இருக்கிற அந்நியரை ஆசீர்வதியும். இரட்சிக்கப்படாதவர்களை ஆசீர்வதியும், அவர்கள் உம்முடைய பிள்ளைகளாக ஆவார்களாக. 148. நாங்கள் எங்களுடைய தலைகளை வணங்கியிருக்கையில், நான் வியப்படைகிறேன்- கிறிஸ்துவுக்கு வெளியேயிருக்கும் யாராகிலும் ஒருவர் இங்கே இருப்பீர்களாயின், உங்கள் கரத்தை மேலே உயர்த்தி, ‘சகோதரன் பிரன்ஹாமே, நான் என்னுடைய கரத்தை தேவனை நோக்கி உயர்த்துகிறேன், எனவே நீர், அவராலும் அதைக் காண முடியும். நான் நினைவு கூரப்பட வேண்டுமென்று விரும்புகிறேன், மிகவும் காலதாமதமாவதற்கு முன்பே பேழைக்குள் கொண்டு வரப்பட விரும்புகிறேன். நீர் எனக்காக ஜெபிக்க மாட்டீரா-?’ என்று கூறுங்கள். நீங்கள் அப்படியே உங்கள் கரத்தை உயர்த்தி, "என்னை நினைவு கூரும்’ என்று கூறுங்கள். ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே, (தேவன்) உன்னை ஆசீர்வதிப்பாராக. சகோதரனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. "ஜீவியத்தின் புயல்கள் பொங்கி எழும்போது, என் அருகில் நில்லும்.’ 149. நண்பனே, உன்னுடைய தீர்மானத்தை நான் செய்ய முடியாது. உனக்காக ஜெபிக்க மாத்திரமே என்னால் முடியும். நீ தான் உன்னுடைய தீர்மானத்தைச் செய்தாக வேண்டும். அவருடைய மகத்துவத்தின் பிரசன்னத்திற்குள் வந்து, அவர் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிற அன்பைக் காணக்கூடிய நேர்மையான இருதயமுடைய எந்த நபராவது இங்கே இருக்கிறார்கள் என்று நான் நம்பவில்லை... இப்பொழுது, நீங்கள் எதற்காக உங்கள் கரத்தை உயர்த்தினீர்கள்-? ஏதோவொன்று உங்கள் இருதயத்தைத் தட்டிக் கொண்டிருக்கிறது. அது தான் தேவன், அவர் பேழைக்குள் உங்களை இழுக்கும்படியாக முயற்சித்துக் கொண்டிருக்கிறார். 150. "என் பிதா ஒருவனை இழுத்துக் கொண்டாலொழிய அவன் என்னிடத்தில் வர முடியாது. என்னிடத்தில் வருகிற எல்லாரையும், நான் புறம்பே தள்ளுவதில்லை. நான் அவனுக்கு நித்திய ஜீவனைக் கொடுத்து, கடைசி நாட்களில் அவனை எழுப்புவேன்.’ 151. பயப்பட வேண்டாம். தேவன் காற்றுகளை அச்சுறுத்தி விரட்டியடித்துக் கொண்டிருக்கிறார். தேவன் பேழையை ஓட்டிக் கொண்டிருக்கிறார், அவரிடம் எல்லா காரியங்களும் இருக்கின்றன, அவர் அவைகளை அருளி இருக்கிறார். ஏன், நோவா எந்த ஜெயங்களையும் கொண்டிருக்கவில்லை, அங்கே புயல்களோ சோதனைகளோ இருக்கவில்லை. நாம் ஒரு சிறிய பாதுகாப்பான சுரங்கப் பாதையினூடாகப் போகும்படிக்கு கொண்டு போகப்படுவோமானால், அங்கே எந்த சந்தோஷமுமே இல்லை. ஜீவியத்தினுடைய புயல்கள் தான் நம்மை சந்தோஷமாக வைக்கிறது. நமக்குக் கொஞ்சம் இருள் இல்லாவிட்டால், பகல் வெளிச்சம் என்றால் என்ன என்பதைக் குறித்து நாம் ஒரு போதும் அறிய மாட்டோம். நமக்கு ஒரு மலை இருந்திராவிட்டால், மலை உச்சி என்றால் என்ன என்பதைக் குறித்து நமக்கு ஒரு போதும் தெரியாது. நீங்கள் கொஞ்சம் வியாதிப்பட்டு இருக்காவிட்டால், நல்ல ஆரோக்கியம் என்றால் என்ன என்பதைக் குறித்து நாம் ஒரு போதும் அறிந்திருக்க மாட்டோம். நீங்கள் ஒரு காலத்தில் பாவியாக இருந்திராவிட்டால், எப்படி இரட்சிப்பில் களிகூருவது என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். தேவன் எல்லா காரியங்களையும் உண்டாக்கியிருக்கிறார், மாறுபட்டவைகளின் பிரமாணம் (law of contrast). அவர் உங்களை நேசிக்கிறார். இப்பொழுது, நீங்கள் உங்கள் தலைகளைத் தாழ்த்தி, உங்கள் கரங்களை உயர்த்தி வைத்திருக்கையில். 152. பிதாவே, தேவனே, நான் ஜெபிக்கிறேன், இன்றைக்கு, வாசல் இன்னும் திறந்திருக்கையில், ஜனங்கள் கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும், வடக்கிலிருந்தும், தெற்கிலிருந்தும் ஒன்றாகக் கூடி வந்து கொண்டிருக்கிறார்கள். மகத்தான அடையாளங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. வானங்களில், பயமூட்டும் காட்சிகள்; காற்று மண்டலத்தின் அணுக்கள் பிளக்கப்பட்டுள்ளன, ஹைட்ரஜன் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. தட்டுகள் பறந்து கொண்டிருக்கின்றன; புரிந்து கொள்ள முடியாத ஏவுகணைகள், அதை ஏதோவொரு வகையான அறிவுத்திறன் என்று அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள், (அவர்களுக்கு அது தெரியாது, விஞ்ஞானத்தினால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை), அவை மின்னல் வேகத்தில், வேறு எங்கேயோ இருந்து மர்மமான முறையில், காட்சியில் மெல்ல நுழைந்து விடுகின்றன. ஓ தேவனே, நாங்கள் முடிவுக்கு அருகாமையில் இருக்கிறோம். 153. ஏனோக்கு கட்டின அந்த மகத்தான கூர்நுனி கோபுரம், அதன் கடைசி அறை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, இப்பொழுது அந்த இராஜாவின் அறைக்காக, கர்த்தருடைய வருகைக்காக ஆயத்தமாயுள்ளது, சரியாக அந்த உச்சியில் மையக் கல்லிற்காக (keystone) ஆயத்தமாயுள்ளது. வான சாஸ்திர நாட்காட்டி எல்லாமே சரியாக நேராக, அதை அறிவித்துக் கொண்டிருக்கிற நட்சத்திரங்களை நோக்கிச் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் முதல் தடவை அதைச் செய்கையில், சாஸ்திரிகள் மேலே நோக்கிப் பார்த்து, அந்த நட்சத்திரங்களைக் கண்டு, அவர்கள், "அதோ, அந்த மகத்தான இராஜா வருகிறார்’ என்றார்கள். இப்பொழுது, அந்த நட்சத்திரங்கள் மீண்டும் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கின்றன. 154. இயற்கை யாவுமே புலம்பிக் கொண்டிருக்கிறது. மனிதர்களுடைய இருதயங்கள் பயத்தினால் நிறைந்துள்ளன; தடுமாற்றமான நேரங்கள்; தேசங்களுக்கிடையே இக்கட்டுகள்; சமுத்திரம் முழக்கமாயிருத்தல்; நிலநடுக்கத்தினால் ஏற்படும் பெரிய கடல் அலைகள் (great tidal waves) எல்லாவிடங்களிலும் உடைத்துக் கொண்டு வந்து, கரையில் மேலும் கீழுமாக இருக்கும் நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று போடுகிறது; குதிரைகள் பூட்டப்படாமல் இயங்கும் மோட்டார் வண்டிகள் (horseless carriages) நெடுஞ்சாலைகளிலும் அகலமான பெருஞ் சாலைகளினூடாகவும் தீவட்டிகளைப் போல விளங்கி, மின்னலைப் போல வேகமாய்ப் பறந்து, போய்க் கொண்டிருக்கின்றன. இந்த மைல் கற்களைக் கடந்து, அவைகள் ஒன்றுமே இல்லாதது போல் தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறோம். -!55. ஓ தேவனே, துரிதமாக எங்களை நிறுத்தி விடும். சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதைக் கொண்டு இந்த பாவமான உலகத்தை நிறுத்தி விடும். கர்த்தராகிய இயேசுவே, இன்று தங்கள் கரங்களை மேலே உயர்த்தி இருக்கிறவர்களை இரட்சியும். இன்றைக்கு, இதை அருளும். நீர் அருளின இரக்கம் அவர்கள் ஒவ்வொருவர் மேலும் தங்குவதாக. அவர்கள் சரியாக இப்பொழுதே... என்னால் எதுவும் செய்ய முடியாது, செய்யக் கூடியது வேறு எதுவுமே இல்லை. அடுத்ததாக செய்ய வேண்டியது அவர்களிடம் தான் இருக்கிறது. 156. நீர் பரிசுத்த ஆவியானவரை அனுப்பினீர். அவர் அவர்களுடைய இருதயத்தில் வார்த்தையை வைத்தார். அவர்கள் அதை விசுவாசித்தனர் என்பதற்காக அவர்கள் தங்கள் கரத்தை உயர்த்தினார்கள். நீர், "இதை விசுவாசிக்கிறவன் ஒருக்காலும் அழிந்து போகாமல், நித்திய ஜீவனைக் கொண்டிருக்கிறான்’ என்று கூறினீர். கர்த்தாவே, வந்து, என்றென்றுமாக அவர்களோடு அதை தங்கி இருக்கப் பண்ணும். அவர்கள் உம்மை விசுவாசிக்கிறார்கள். இப்பொழுது அவர்கள் உம்முடைய வார்த்தையை விசுவாசிக்கிறார்கள். நீர், "என் வசனங்களைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவன் நித்திய ஜீவனைக் கொண்டு இருக்கிறான், அவன் ஒரு போதும் ஆக்கினைத் தீர்ப்புக்கு உட்படாமல், நியாயத் தீர்ப்பை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்’ என்று நீர் கூறினது போல், அவன் பேழைக்குள் பாதுகாப்பாக இருக்கிறான். 157. கர்த்தாவே, அவர்கள் புதிதான... தோடு எழும்புவார்களாக - புதிய மனிதர்களைப் போன்றும், புதிய மனுஷிகளைப் போன்றும், புதிய பையன்களைப் போன்றும், புதிய சிறு பெண் பிள்ளைகளைப் போன்றும் எழும்பி, இன்று, இந்த கொஞ்சமான ஜனங்கள் குழுமி இருக்கும் இந்தச் சிறு பழைய கூடாரத்தை விட்டு, புதிய ஜீவனோடு ஜீவிக்கும்படியாகவும், சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணும்படியாகவும், என்ன செய்ய வேண்டும் என்று அவர்களிடம் போதிக்கவும், எல்லா இடங்களிலும் கிறிஸ்துவை உயர்த்தும் படியாகவும் வெளியே போவார்களாக. இதை அருளும், கர்த்தாவே. இப்பொழுது, எங்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம், இயேசுவின் நாமத்தின் வழியாக. ஆமென். ஓ மிருதுவான இரட்சகரே, என்னைக் கடந்து செல்லாதேயும், ஓ, என் தாழ்மையான கூக்குரலைக் கேளும்; மற்றவர்களை நீர் அழைக்கும் போது, என்னைக் கடந்து செல்லாதேயும். இரட்சகரே, இரட்சகரே, என் தாழ்மையான கூக்குரலைக் கேளும்; மற்றவர்களை நீர் அழைக்கும் போது, என்னைக் கடந்து செல்லாதேயும். உம்முடைய சிங்காசனத்தண்டையில் நான் இருக்கட்டும் (இரக்கத்தின் சிங்காசனம், பாருங்கள்-?)... இரக்கம் கண்டு கொள்ளட்டும் (அப்படியே உங்கள் ஆத்துமா தேவனோடு பேசட்டும்!)... (என்னுடைய பாவங்களிலிருந்து) விடுதலையை; காயப்பட்டு, உடைக்கப்பட்டு போன எனது ஆவியை குணப்படுத்தும், என்னுடைய அவிசுவாசம் (நீங்க) உதவி செய்யும். நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம். இரட்சகரே, இரட்சகரே, என் தாழ்மையான கூக்குரலைக் கேளும்; மற்றவர்களை நீர் அழைக்கும் போது, என்னைக் கடந்து செல்லாதேயும். 158. நம்முடைய தலைகள் வணங்கியிருக்கையில். ஓ, நான் இங்கேயுள்ள இந்தப் பழைய கப்பலுக்குள் (hull) வருகிற ஒவ்வொரு தடவையும், நான் அந்த அற்புதமான நேரங்களைக் குறித்து எண்ணிப் பார்க்கிறேன். அது கீல் பூசப்பட்டு, அநேக புயல்களைத் தாங்கி நின்று கொண்டிருக்கிறது என்று நம்புகிறேன், தொல்லைகளின் நாட்களிலும், சோதனைகளின் நாட்களிலும் என்னை ஆதரவாய் பிடித்துக் கொள்ளும் (cradle). 159. பில்லி அங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டிருப்பதைக் காண்கிறேன். அவன்... ஆயினும், இப்பொழுது வித்தியாசமான ஏதோவொன்றைச் செய்யும்படியாக ஆவியானவர் வழி நடத்துவதை நான்-நான் உணருகிறேன். நான் சற்று வித்தியாசமான ஏதோவொன்றைச் செய்யும் படியாக தேவன் விரும்புகிறார் என்பதை நான்-நான் உணருகிறேன். எனக்கு இங்கே சில ஜனங்கள் இருக்கிறார்கள், திரு. D.ஹூக் அவர்களும், திரு.லாங் அவர்களும், எர்வின் அவர்களும், மற்ற அநேகரும் இருக்கிறார்கள், இங்கேயுள்ள ஒரு தாளில் அவர்களுடைய பெயர்களை நான் வைத்திருக்கிறேன், அவர்கள் சிறு ஜெபம் செய்யும் படியாகவும், காரியங்களைக் குறித்துப் பேசவும் வந்திருக்கிறார்கள். அப்படியானால், நாம் ஜெபத்தில் இருக்கையில், இப்பொழுது என்னைக் கவனியுங்கள். நான் பில்லியிடம், "இருக்கை வரிசைகளுக்கு இடையில் இருக்கும் பாதை வழியாக மேலே சென்று, கொஞ்சம் ஜெப அட்டைகளை விநியோகித்து விடு’ என்று சொல்லத் துவங்கினேன். ஆனால் பரிசுத்த ஆவியானவர், "அவ்வாறு செய்யாதே’ என்றார். ஆகையால் தான் நான், "ஓ மிருதுவான இரட்சகரே, என்னைக் கடந்து செல்லாதேயும்’ என்ற பாடலைப் பாடினேன். நான், "அது என்ன, கர்த்தாவே-?’ என்று நினைத்தேன். 160. நான் இதை உங்களிடம் கூற விரும்புகிறேன். இப்பொழுது, நீங்கள் என்னை விசுவாசிப்பீர்களானால், கவனியுங்கள். அது என்னவாக இருந்தாலும், அது உங்களுடைய இருதயமாக உள்ளது, நீங்கள் எதை அறிய வேண்டுமென்று விரும்பினாலும், உங்களுடைய வியாதி என்னவாக இருந்தாலும், இப்பொழுதே அவரை விசுவாசியுங்கள். அவர் இப்பொழுதே உங்களிடம் பேசுவார். அவர் அதைச் செய்யப் போகிறார். அவர் தனிப்பட்ட முறையில் உங்களிடம் பேசப்போகிறார். நான் அதை என்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். பரிசுத்தாவியானவர் அதைச் செய்யப் போகிறார், உங்களிடம் பேசப் போகிறார், உங்களுக்கு என்ன தேவை என்று உங்களிடம் கூறப் போகிறார். அவர் உங்களிடம் என்ன பேசினாலும், அதைச் செய்யுங்கள். நீங்கள் முடமானவர்களாயிருந்து, அவர், "எழுந்து நட’ என்று கூறினால், நீங்கள் எழுந்து நடந்து செல்லுங்கள். உங்களுக்கு புற்று நோய் இருந்து, அவர், "இன்று முதற்கொண்டு, அதைக் குறித்து மறந்து விடு’ என்று கூறுவாரானால், நீங்கள் அதைச் செய்யுங்கள். அப்பொழுது அது சம்பவிக்காமல் போகிறதா என்று பாருங்கள். 161. நீங்கள் இடுக்கண்ணில் நின்று கொண்டு, எந்த வழியாகத் திரும்புவது என்று அறியாது இருக்கும் போது, என்ன செய்ய வேண்டும் என்று அவர் உங்களிடம் கூறுவார். அவர் சரியாக இப்பொழுதே உங்கள் இருதயத்தில் அதை வைப்பார். அவரை சந்தேகிக்காதீர்கள். போய் அதைச் செய்யுங்கள். செய்ய வேண்டுமென்று அவர் உங்களிடம் கூறுவதை அப்படியே செய்யுங்கள். அவர் அதைச் செய்வார். 162. இப்பொழுது, நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில், நான் அவர்களுடைய இந்தப் பெயரை அழைக்கும் போது, நீங்கள் வெளியே நடந்து வருவீர்களானால், அவர்கள் சற்று நேரம் இங்கே மேலே மேடைக்கு வர விரும்புகிறேன். அதன் பிறகு, நாங்கள் யாவரும் தொடர்ந்து தலைகளை வணங்கின வண்ணமாயிருக்கையில், ஜெபத்திற்காக வர விரும்புகிற உள்ளூர் ஜனங்கள் யாரும் கூட முன்னால் வாருங்கள். 163. மிகவும் வினோமான காரியம், நான் சற்று முன்பு பரிசுத்த ஆவியானவரால், ஏதோ ஓன்றைக் குறித்து மிகவும் வினோதமாக எச்சரிக்கப்பட்டேன். இதை எவ்வாறு செய்வது என்று நான் அப்படியே வியந்து கொண்டிருந்தேன், ஆனால் அவர் சற்று முன்பு என்னிடம் கூறினார், அவர் சரியாக இருக்கிறார் என்பது எனக்குத் தெரியும். ஒரு சிறு ஜெபத்திற்கோ, தேவனுக்கு முன்பாக சிறிய ஏதோவொன்றிற்கோ வாஞ்சையுள்ளவர்கள், அல்லது, ஒரு தேவையோ, வியாதியோ உள்ளவர்களோ, பணம் சம்பந்தமான தேவையுள்ளவர்களோ, சரீரபிரகாரமான தேவையுள்ளவர்களோ, பொருள் சார்ந்த தேவையுள்ளவர்களோ, உங்களுடைய பிரச்சினைகள் என்னவாக இருந்தாலும், நாங்கள் அந்தப் பாடல் வரியை (verse) இன்னும் ஒரு விசை பாடுகையில், இப்பொழுது சற்று நேரம் மேலே பீடத்தண்டை நடந்து வருவீர்களா. 164. வந்து கொண்டிருக்கிறவர்களைத் தவிர ஒவ்வொருவரும் தொடர்ந்து உங்கள் தலைகளை தாழ்த்திக் கொள்ளுங்கள். இங்கே இந்தச் சிறு பெண் பிள்ளைளோடு இருக்கும் தாயார், நீ இங்கே, சரியாக இங்கே மேடைக்கு அவளைக் கூட்டிக் கொண்டு வர நான் விரும்புகிறேன். சரி. இரட்சகரே, இரட்சகரே, என் தாழ்மையான கூக்குரலைக் கேளும்; மற்றவர்களை நீர் அழைக்கும் போது, என்னை கடந்து செல்லாதேயும். இரக்கத்தின் சிங்காசனத்தண்டையில் நான் இருந்து ஒரு இனிய விடுதலையைக் கண்டுகொள்ளட்டும்; எனது உடைந்து போன, காயப்பட்ட ஆவியைக் குணப்படுத்தும், என்னுடைய அவிசுவாசம் (நீங்க) உதவி செய்யும். இரட்சகரே... 165. எனது அன்புக்குரிய நண்பர்களே, உங்களுடைய தலைகளை வணங்கியிருக்கையில், என்னுடைய ஜீவியம் முழுவதும் தவறாக இருப்பதைத் தவிர மற்ற எதாகவும் இருக்கும்படியாக நான் முயற்சி செய்திருக்கிறேன். தேவனோடும், என்னுடைய சக மனிதனோடும் இடைபடுவதில் நேர்மையாக இருக்கும்படிக்கே நான் முயன்று வந்திருக்கிறேன். நான் ஒவ்வொரு தடவையும் போய், அப்படியே பரிசுத்த ஆவியானவர் என்னிடம் கூறுவதைச் செய்யவே முயற்சித்து இருக்கிறேன். அந்தக் காரணத்தினால் தான் நான் ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பிறகு கூட்டங்களை நிறுத்தி விட்டு, வேறு இடங்களுக்குச் செல்கிறேன், ஏனென்றால் நான் ஆவியானவரின் வழிநடத்துதலைப் பின்பற்றுகிறேன். 166. இந்தக் காலையில், இங்கே பிரசங்கம் பண்ணிக் கொண்டிருக்கையில்... ஒரு ஜெப வரிசையைக் கொண்டிருக்கப் போவதாக இருந்தோம், மேலே வந்து, பகுத்தறிதலுக்காக ஜனங்களை மேலே கொண்டு வந்து, அவர்களோடு பேசினோம். ஆனால் ஏதோவொன்று என்னிடம் பேசி, "ஜனங்களிடம் சொல்லு...’ என்றது. ஆகையால் தான் நான் உடனடியாக நிறுத்தி விட்டேன்; அது சம்பவித்தது. "ஜனங்களை இங்கே மேலே (வரும்படி) அழைப்பு விடுத்து, அவர்களிடம், ‘வந்து, என்னிடம் கேளுங்கள்’ என்று கூறு. அவர்களுக்குத் தேவை இருக்குமானால், நான் அவர்களிடம் கூறுவேன்’ என்றார். 167. அந்தச் சிறு பெண் பிள்ளை எவ்வாறு சுகமடையக் கூடும் என்று நீங்கள் வியப்படைகிறீர்கள், புற்று நோய் பீடித்துள்ள நீங்கள் எவ்வாறு சுகமடைய முடியும் என்றும், தொண்டை பிரச்சினையோடு இங்கேயிருக்கும் நீங்கள் எப்படி சுகமாக முடியும் என்றும், இந்த கைத்தடி வைத்திருக்கும் நீங்கள் எவ்வாறு சுகமடைய முடியும் என்றும், அந்த ஊன்று கட்டையின் மேல் இருக்கும் நீங்கள் எவ்வாறு சுகமடைய முடியும் என்றும், குருடர்களை எவ்வாறு காணச் செய்ய முடியும் என்றும், வேதனையோடும் தொல்லையோடும் இருக்கும் நீங்கள் எவ்வாறு விடுதலை அடைய முடியும் என்று நீங்கள் வியந்து கொண்டிருக்கிறீர்கள். குடும்ப பிரச்சனை உள்ள யாரோ ஒருவர் இங்கே இருக்கிறீர்கள், குடும்ப பிரச்சனை. ‘சகோதரன் பிரன்ஹாமே, நான் எப்பொழுதாவது எவ்வாறு அதைத் தாண்டிச் செல்வது-?’ அவர் சரியாக இப்பொழுதே உங்களிடம் கூறுவார். 168. வேறு பிரச்சனைகள், நீங்கள் இதை, அதை அல்லது மற்றதைக் குறித்து வியந்து கொண்டிருக்கிறீர்கள். அப்படியே உங்கள் இருதயத்தில் என்ன தோன்றினாலும் (strikes), இப்பொழுதே அதைப் பின்பற்றி, அது சரியல்லவா என்று பாருங்கள். அப்படியே அதைப் பின்பற்றி, அது சரி அல்லவா என்று பாருங்கள். உங்களுடைய மனதை மாற்றி விட வேண்டாம். சரியாக அதனோடு தரித்திருங்கள். அவர் உங்களிடம் பேசுவதாகக் கூறினார். இப்பொழுது, ஒவ்வொருவரும் ஜெபத்தில் இருக்கையில். (சகோதரன் பிரன்ஹாம் பிரசங்க பீட ஒலிப்பெருக்கியை விட்டு விலகி, பீடத்திலிருக்கும் ஜனங்களுக்காக ஜெபிக்கத் தொடங்குகிறார் - ஆசிரியர்.) பரலோகத்திலிருக்கிற பிதாவே, என்னுடைய சகோதரனை ஆசீர்வதியும். இவருடைய இருதயத்தின் வாஞ்சைகள் ஒவ்வொன்றையும், அவர் எதை வாஞ்சித்தாலும் அதை இவருக்குக் கொடும். அன்புள்ள தேவனே, என்னுடைய சகோதரியை ஆசீர்வதியும். இன்றைக்கே அந்த பாரத்தை இவளுடைய இருதயத்தை விட்டு வெளியே எடுத்துப் போடும். பிதாவே, என்னுடைய சகோதரியை ஆசீர்வதியும். ஆவியானவர் தாமே இவள் மேல் இருப்பாராக. தேவனே, என்னுடைய சகோதரியை ஆசீர்வதியும். இவளுடைய இருதயத்தின் ஆழமான வாஞ்சைகளை இவளுக்குக் கொடுத்தருளும். இன்னும், பிதாவே, இங்கேயிருக்கும் என்னுடைய சகோதரிக்கும், இயேசுவின் நாமத்தின் மூலமாக அதை அருளும். 169. அன்புக்குரிய இந்தச் சிறு பெண் பிள்ளையைப் பாரும், பிதாவே, நீர் இவளுக்காக மிகவும் அதிகமானவற்றை செய்தீர் என்பதற்காக நாங்கள் மிகவும் நன்றி உள்ளவர்களாய் இருக்கிறோம். சமீபத்தில் நீர் எங்களுக்கு உதவி செய்தீர். நீர் இந்தச் சிறு பிள்ளையை முழுமையாக சுகப்படுத்தி, மற்றவர்களுக்கு ஒரு வெளிப்படுத்துதலைக் கொடுக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன், அப்பொழுது அவர்களால் உம்மை விசுவாசிக்க முடியும். இந்தக் காலை வேளையில், நான் இந்தப் பிள்ளையை, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆசீர்வதித்து, அவளுடைய சரீரத்திலிருக்கிற வியாதியை சபிக்கிறேன்...-?... 170. கர்த்தாவே, இன்றைக்கு என்னுடைய அன்புக்குரிய சகோதரனை ஆசீர்வதியும். இவர் அதோ அங்கேயுள்ள கல்வாரியை நோக்கிப் பார்த்து, அங்கே உம்மை அறிந்து, விசுவாசம் வைத்து, அவர் அங்கே வைத்திருக்கும் விசுவாசம் என்னவாக இருந்தாலும், தேவன் அதை உறுதிப்படுத்தி, அதை நிறைவேற்றுகையில், இவருடைய விசுவாசம் ஒரு போதும் தோல்வி அடையாதிருப்பதாக. என்னுடைய சகோதரன் மார்கன் அவர்களை ஆசீர்வதியும். அவருடைய இருதயத்தின் வாஞ்சையை அவருக்குக் கொடுத்தருளும். இன்றைக்கு, அவர் கேட்பது என்னவாக இருந்தாலும், கர்த்தருடைய நாமத்தில், நீர் அதைக் கொடுப்பீராக. என்னுடைய சகோதரியை ஆசீர்வதியும்...-?... கர்த்தாவே, இயேசு கிறிஸ்து மூலமாக, இவள் வாஞ்சிக்கிற காரியங்களை இவளுக்குக் கொடுப்பீராக. பிதாவாகிய தேவனே, என்னுடைய சகோதரன், நான்...-?... அவருடைய இருதயத்தின் வாஞ்சைகள் நிறைவேறுவதாக...-?... 171. இங்கேயுள்ள எங்கள் சகோதரன்...-?... தேவனே, ஆசீர்வதியும்...-?... பரலோகப் பிதாவே, அவருடைய இருதயத்தின் வாஞ்சை, அவர் அந்த வாஞ்சையை இயேசு கிறிஸ்துவில் கண்டு கொள்வாராக. கர்த்தாவே, சுகத்திற்காக உமக்கு நன்றி. பிதாவாகிய தேவனே, என்னுடைய சகோதரன் மேல் கரங்களை வைத்து, அவருடைய இருதயத்தின் வாஞ்சை அருளப்படும்படியாக நான் ஜெபிக்கிறேன்...-?... பிதாவே, என்னுடைய சிறிய சகோதரனை ஆசீர்வதியும். இது நான்...-?... பிதாவே, இந்தச் சிறு பெண் பிள்ளையை நான் ஆசீர்வதிக்கிறேன். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், அவள் வேண்டிக் கொள்வதைப் பெற்றுக் கொள்வாளாக, பிதாவே, இயேசுவின் நாமத்தில். இதை அருளும். கர்த்தாவே, என்னுடைய சகோதரியை ஆசீர்வதியும். இயேசுவின் நாமத்தில்... (சகோதரன் பிரன்ஹாம் மேடையிலுள்ள ஜனங்களுக்காக தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருக்கிறார், ஆனால் அவருடைய வார்த்தைகளை தெளிவாகக் கேட்க முடியவில்லை - ஆசிரியர்.) 172. சர்வ வல்லமையுள்ள தேவனே, நீர் வானங்களையும் பூமியையும் ஆளுகை செய்கிறீர், நீர் மனிதனுடைய இருதயத்தை ஒழுங்குபடுத்தி வைக்கிறீர். நீர் நட்சத்திரங்களை வானங்களில் ஸ்தாபித்தீர், அவைகள் தொடர்ந்து அங்கே இருக்கின்றன. நீர் சூரியனை அதனுடைய சுற்றுப் பாதையில் தொங்க வைத்திருக்கிறீர், அது அங்கேயே தரித்திருக்கிறது. நீர் சந்திரனை அங்கே மேலே வானங்களில் வைத்திருக்கிறீர், சமுத்திரத்தைக் கவனித்துக் கொள்ளும்படி நீர் அதை வைத்திருக்கிறீர்; அது கடக்கக் கூடாத எல்லையை அதற்கு வைத்தீர். நீர் பேச அவைகள் கீழ்ப்படியும். தேவனாகிய கர்த்தாவே, நீர் மனிதனுடைய இருதயத்தில் பேசுகிறீர். அது எப்போதுமே வளைந்து கொடுக்கக் கூடியதாக இருந்து, ஆவிக்குள் உறிஞ்சும்படிக்கு ஆயத்தமாய் இருந்து, தேவன் கட்டளையிட்டிருக்கிற காரியங்களைச் செய்வதாக. 173. பரலோகப் பிதாவே, நீர் இந்தக் காலையில், அபாத்திரமான உமது ஊழியக்காரனாகிய என்னுடைய இருதயத்தில் பேசியிருக்கிறீர். நீர் பேச விரும்பினதை நான் ஜனங்களிடம் பேசி இருக்கிறேன்; அவர்கள் ஒவ்வொருவரிடமும் அது செய்யப்பட்டது. இப்பொழுதும், பிதாவே, நீர் எனக்குக் கொடுத்த உமது வெளிப்பாட்டின் நினைவு கூருதலின்படி (commemoration) நான் இறங்கிச் சென்று, அவர்கள் மேல் என் கரங்களை வைத்தேன். மேலும், பிதாவே, நீர் அந்த நேரத்தில் அவர்கள் இருதயத்தில் என்ன வைத்திருந்தாலும், தேவனே, அது சரியாக அங்கே அவர்களுடைய நித்திய தீர்மானமாக இருந்து, உம்முடைய ஆவி இப்பொழுது இங்கே இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு, சரியாக அவர்களுடைய இருதயங்களில் வைக்கப்படுவதாக. அவர்கள் முடமானவர்களாக இருந்தால், அவர்கள் நடப்பார்களாக. அவர்கள் குருடர்களாக இருந்தால், அவர்கள் காணுவார்களாக. அவர்கள் வேதனையோடு இருந்தால், அவர்கள் சந்தோஷமடைவார்களாக. அவர்களுக்குப் பிரச்சனைகள் இருந்தால், அது எடுக்கப்பட்டு போவதாக. கர்த்தாவே, இதை அருளும். அவர்கள் ஒரு தீர்மானத்தைச் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தால், இப்பொழுதே சரியான தீர்மானம் வருவதாக. எங்களுக்கு அவசியமாயிருக்கிற இந்தக் காரியங்கள் எல்லாவற்றையும் பரிசுத்த ஆவியானவர் தாமே வெளிப்படுத்துவாராக. இதை அருளும், கர்த்தாவே. நாங்கள் இங்கே பீடத்தில், உமக்காக காத்துக் கொண்டும், உம்மை ஆராதித்துக் கொண்டும் இருக்கிறோம். 174. இப்பொழுது, பிதாவே, நீர் இன்னும் இவர்களிடம் பேசியிராத யாராவது ஒருவர் இங்கே இருப்பார்களானால், இப்பொழுதே உம்முடைய ஆவி தாமே பொங்கியெழுந்து (surge down) பாய்வதாக. அது இங்கே இந்த மேடையில் மேலும் கீழும் அசைவாடி, எல்லாவற்றையும் வெளிப்படுத்துவதாக. கர்த்தாவே, ஒவ்வொரு இருதயமும் நிச்சயத்தோடிருப்பதாக. அது ஐயத்துக்கிடமே இல்லாமல் செய்து, அங்கே எங்குமே எந்த சந்தேகமும் இல்லாமல் இருப்பதாக. உமது ஆவி தாமே எல்லா முரண்பாடுகளையும் (friction) எடுத்துப் போடுவதாக. 175. அன்புக்குரிய இந்த ஜனங்களாகிய சபையோரின், பின்னால், சுகமாகவும், பிரச்சனை (ஒன்றும்) இல்லாமலும், உம்மால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களுமாய் இருக்கிறவர்கள், இந்தக் காலை வேளையில், ஆரோக்கியமாகவும் பெலமுள்ளவர்களாகவும் இங்கே உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள், ஓ, அவர்கள் இந்த மற்றவர்களுக்காக, தங்களுடைய உற்ற நண்பர்களுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள், கர்த்தாவே. அவர்கள் பிரச்சனைகளைப் போன்றவைகளைக் கொண்டு இருக்கிறார்கள், நீர் அவர்களுக்கு உதவி செய்திருக்கிறீர் என்பதை அவர்கள் அறிவார்கள். 176. இப்பொழுது, உமது மகத்தான பரிசுத்த ஆவியானவர் அபிஷேகித்து, அசைவாடி, சரி என்று நாங்கள் உணருகிற அந்தக் காரியத்தைச் செய்து கொண்டிருக்கிற வேளையில், நாங்கள் தாழ்மையோடு காத்துக் கொண்டிருக்கையில், பிதாவே, நீர் உமது ஆவியை அனுப்பி, ஒவ்வொரு இருதயத்திடமும் இப்பொழுதே, எல்லாவற்றையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று நாங்கள் ஒரே இசைவோடு ஜெபித்துக் கொண்டிருக்கிறோம், கர்த்தாவே. இதை அருளும், கர்த்தாவே. இப்பொழுது நம்முடைய தலைகளை வணங்கினவர்களாய், ஒவ்வொருவரும் ஜெபத்தில் இருங்கள், நாம் சில பாடல்களைப் பாடப் போகிறோம். 177. இப்பொழுது சோர்ந்து போக வேண்டாம். நான் ஒரு மதவெறி பிடித்தவன் அல்ல. உங்களுக்கு அது தெரியும். நான் அவ்வாறு இருந்தால், அது அப்படி அல்லவென்று எனக்குத் தெரியும். ஆனால் ஏதோவொன்று உறுதியாகவே என்னிடம் பேசி, ‘நான் அவர்களிடம் பேசுவேன். நீ வெறுமனே அவர்களை இங்கே மேலே அழை’ என்றார். செய்ய வேண்டுமென்று அவர் கூறினதையே நான் செய்தேன். இப்பொழுது, நாம் நம்முடைய தலைகளை வணங்கியவாறு, பாடல்களைப் பாடுகையில், அவர் உங்களிடம் என்ன கூறுவார் என்று பாருங்கள். அவர் உங்களிடம் என்ன கூறினாலும், அதைப் பேசிக் கொண்டிருப்பது அவர் தான். நாம் ஒளியில் நடப்போம், அவ்வளவு அழகான ஒளியில், அது இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயுள்ள இடத்திலிருந்து வருகிறது, இயேசுவே, உலகத்தின் ஒளியே, எங்களைச் சுற்றிலும் இரவும் பகலும் பிரகாசியும் நாம் மென்மையாக பாடுகையில், ஒவ்வொருவரும் ஜெபத்தில் இருங்கள். நாம் ஒளியில் நடப்போம், அழகான ஒளியில், அது இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயுள்ள இடத்திலிருந்து வருகிறது, இயேசுவே, உலகத்தின் ஒளியே, எங்களைச் சுற்றிலும் இரவும் பகலும் பிரகாசியும் நாம் ஒளியில் நடப்போம், அழகான ஒளியில், அது இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயுள்ள இடத்திலிருந்து வருகிறது, இயேசுவே, உலகத்தின் ஒளியே, எங்களைச் சுற்றிலும் இரவும் பகலும் பிரகாசியும் நாம் ஒளியில் நடப்போம் (எந்த ஒளியில்-? அவர் அதை இப்பொழுது கொடுத்துக் கொண்டிருக்கிறார்). ஒளியில்..., அது இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயுள்ள இடத்திலிருந்து வருகிறது, இயேசுவே, உலகத்தின் ஒளியே, எங்களைச் சுற்றிலும் இரவும் பகலும் பிரகாசியும். வாருங்கள், அவரை உங்களுடைய ராஜாவென்று அறிக்கையிடுங்கள், இயேசுவே, உலகத்தின் ஒளி; அப்பொழுது பரலோகத்தின் மணிகள் ஒலிக்கும், இயேசுவே, உலகத்தின் ஒளி. நாம் ஒளியில் நடப்போம், அழகான ஒளியில், அது இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயுள்ள இடத்திலிருந்து வருகிறது, இயேசுவே, உலகத்தின் ஒளியே, எங்களைச் சுற்றிலும் இரவும் பகலும் பிரகாசியும் நாம் ஒளியில் நடப்போம், அழகான ஒளியில், அது இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயுள்ள இடத்திலிருந்து வருகிறது, இயேசுவே, உலகத்தின் ஒளியே, எங்களைச் சுற்றிலும் இரவும் பகலும் பிரகாசியும்... *******